டோனியை ஏழாவது வீரராக துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறக்கியமை மிகப்பெறும் தவறு

2

நியுசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் இந்தியா எம் எஸ் டோனியை ஏழாவது வீரராக துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறக்கியமை மிகப்பெறும் தவறு என  இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலியும்  விவிஎஸ் லக்ஸ்மனும் விமர்சித்துள்ளனர்.

தந்திரோபாய ரீதியில் இது பெரும் தவறு என அவர்கள் விமர்சித்துள்ளனனர்.

டோனி பண்ட்யாவிற்கு முதலில் துடுப்பெடுத்தாட களமிறக்கப்பட்டிருக்கவேண்டும்,இது தந்திரோபாய ரீதியில் பெரும் தவறு என விமர்சித்துள்ள லக்ஸ்மன்  டோனியை தினேஸ் கார்த்திக்கிற்கு முதலில் துடுப்பெடுத்தாட செய்திருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

டோனி  துடுப்பெடுத்தாடுவதற்கான பொருத்தமான தருணமாக அது காணப்பட்டது என தெரிவித்துள்ள லக்ஸ்மன் 2011  இறுதிப்போட்டியில் டோனி யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக களமிறங்கி வெற்றிக்கான பாதையை வகுத்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

டோனியின் துடுப்பாட்டம் மாத்திரமல்ல இளம் வீரர்கள் மீது அவர் செலுத்தியிருக்க கூடிய தாக்கத்தையும் கருத்தில்கொண்டிருக்கவேண்டும் என  சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அந்த தருணத்தில் இந்தியாவிற்கு அனுபவம் அவசியமாகயிருந்தது பண்ட் விளையாடும்போது மறுமுனையில் டோனியிருந்திருந்தால் பண்ட் அந்த சொட்டை விளையாட டோனி அனுமதித்திருக்க மாட்டார் என கங்குலி தெரிவித்துள்ளார்.

காற்று வீசும் திசையை நோக்கி அந்த சொட்டை அடிக்கவேண்டாம் என டோனி அறிவுறுத்தியிருப்பார் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடுமாறு டோனி தெரிவித்திருப்பார் எனவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.

டோனி நான்காவது ஐந்தாவது வீரராக துடுப்பெடுத்தாடியிருக்கவேண்டும்,அவர் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுவதற்கு அனுமதித்திருக்கமாட்டார்,எனவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதே கருத்தினை சச்சின் டெண்டுல்கரும் வெளியிட்டுள்ளார்

டோனியை ஏழாவது வீரராக களமிறக்கியதன் மூலம் கோலி தவறிழைத்துவிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.