தோனியின் சர்ச்சைக்குரிய ரன்அவுட்

2

நிஸிலாந்துடனான நேற்றைய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தோனி ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தமை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்செஸ்டரில் நேற்று இடம்பெற்ற நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ஓட்டங்களினால் இந்திய அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

இந்தப் போட்டியில் 240 என்ற வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடி வந்த வேளையில் இறுதி 2 ஓவர்களுக்கு 31 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது. ஆடுகளத்தில் தோனி 43 ஓட்டத்துடனும் புவனேஷ்வர் குமார் எதுவித ஓட்டமின்றியும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இந் நிலையில் 49 ஆவது ஓவரை எதிர்கொண்ட தோனி முதல் பந்திலேயே ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளினார். இதனால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 215 ஆக அதிகரித்தது. அதன் பின்னர் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் தோனி 2 ஓட்டங்கள் ஓட முற்பட்டு ரன்அவுட் முறையில் 50 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. இந் நிலையில் தோனி ஆட்டமிழந்த பந்து நோ போல் என தெரியவந்துள்ளது. காரணம் இறுதி பவர் பிளேயில் வெளி வட்டத்தில் மைதானத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அதற்கு மேல் வீரர்கள் நின்றால் அது நோ பால் என்று கருதப்படும். தோனி ஆட்டமிழந்த 48.3 பந்தில் நியூசிலாந்து அணியின் 6 வீரர்கள் வெளிவட்டத்தில் இருந்தனர்.

இதனால் அந்த பால் நோ போல் ஆகும். தோனியின் அவுட் சர்ச்சையாகி உள்ளது. எனினும் நோ போலில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தாலும் அது ஆட்டமிழப்பாகவே கருதப்படும். இதனால் தோனிக்கு அவுட் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருவேளை இந்த 6 வீரர்கள் களத்தடுப்பு நின்றதை நடுவர் கவனித்து இருந்தால் நிறைய மாற்றங்கள் போட்டியில் நடந்து இருக்கும்.

5 வீரர்களை மட்டும் நிற்க வைக்கும்படி நடுவர் கேட்டு இருக்கலாம். இதனால் அந்த பந்தை எளிதாக தோனி வெளி வட்டத்தை நோக்கி அடித்து இருக்கலாம். வெளியில் களத்தடுப்பாளர்கள் இல்லாத காரணத்தால் ஹிட் அடிக்க வசதியாக இருந்திருக்கும். தோனி ரன் அவுட் ஆகி இருக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும். அந்த பந்தில் ஒரு ஓட்டம் வந்தது மட்டுமில்லாமல், அடுத்த பந்தில் பிரி ஹிட் வந்திருக்கும். அந்த ஒரு தவறு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் போட்டியே மாறி இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.