முடிவுக்கு வர இருக்கிறது ராஜா ராணி!

ராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் படு பிரபலம். அதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா மானசா-சஞ்சீவ் நிஜ ஜோடிகளாக மாறியது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.

ஒன்றாக இணைந்த பிறகு சீரியலில் இவர்களது கெமிஸ்ட்ரி அதிகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறதாம். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் அதே சமயம் இந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க அதே ஜோடி நடிக்க இருக்கிறார்கள் என்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இனிமேல் இந்த ஜோடியை பார்க்க முடியாதா என்ற ஏக்கம் மட்டும் ரசிகர்களிடம் உள்ளது.

About Thinappuyal News