சிம்புவின் முடிவால் சோகத்தில் அவருடைய ரசிகர்கள்!

3

சிம்பு தமிழ் சினிமாவிற்காக சிறு குழந்தையிலிருந்து பணியாற்றி வருகின்றார். இன்னும சொல்ல வேண்டுமென்றால் சிம்பு வீட்டில் இருந்ததை விட கேமராவிற்கு முன் இருந்தது தான் அதிகம்.

அப்படியிருக்க மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இதுக்குறித்து விசாரிக்கையில் சிம்பு ‘என்னால் தொடர்ந்து 7 நாட்கள் வேலை செய்ய முடியாது, என் உடல்நிலை அதற்கு சரிப்பட்டு வரவில்லை’ என்று கூறுகின்றாராம்.

தயாரிப்பாளரோ ‘நாம் செல்வதோ வெளியூர், அங்கு விடுமுறை விட்டால் அந்த நாட்களுக்கும் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும், அதனால், ஒரு கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்கவேண்டும்’ என்கிறாராம்.

இதனால், தான் மாநாடு இன்னும் தொடங்காமல் இருக்க, இது சிம்பு ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தை கொடுத்துள்ளது.