சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 13 பேர் விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளனர்!

5

சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற 13 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த 13 பேரும் இலங்கைக்கு விசேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நாடுகடத்தப்பட்டுள்ள 13 பேரும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

விசேட விமானத்தின் மூலம் அவுஸ்திரேலிய பொலிஸாரின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 13 பேரும் விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைக்காக குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE