வவுனியாவில் பிளாஸ்திக் போத்தல்களின் பாவனை, அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு!

7

வவுனியாவில் அதிகரித்து வரும் பிளாஸ்திக் போத்தல்களின் பாவனை தொடர்பாகவும் அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு இன்று (16.08) வவுனியா நகரசபையிலும் நகர்ப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.

வவனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையில் வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும் வேறு இடங்களிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக வீசப்படும் பிளாஸ்திக்போத்தல்களை மீள்சுழற்சிக்காக சேமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு செயற்றிட்டமானது வவுனியா நகர்ப்பகுதியில் விசேடமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபையின் உறுப்பினர்கள், வவுனியா வளாக மாணவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், என பலரும் கலந்துகொண்டு பிளாஸ்திக் போத்தல்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான சேமிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.

SHARE