மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

10

ஜா – எல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மின்சாரம் தாக்கி வெளிநாட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த நபர் துருக்கி நாட்டை சேர்ந்த 19 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வெளிநாட்டில் இருந்து குறித்த தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய இயந்திரத்தை பொருத்திக்கொண்டிருக்கையில் எதிர்பாராத விதத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனை அடுத்து குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE