முன்னாள் ஜனாதிபதியின் பூதவுடல் நல்லடக்கம்

19

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் (Robert Mugabe) பூதவுடல் சொந்த நாட்டில் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை எடுத்துச் செல்லப்பட்டது.

நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முகாபே கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

இந்தநிலையில், சிம்பாப்வே தலைநகர், ஹராரேயில் உள்ள விளையாட்டரங்கத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் இறுதிகிரியை தினம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சிம்பாப்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 40 ஆண்டுகளாக சிம்பாப்வேயின் அரசியலில் இருந்த முகாபே 2017ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE