தோலை நன்றாக உற்றுப் பாருங்கள்

12

உங்கள் முன்கையில் தோலை நன்றாக உற்றுப் பாருங்கள். விருப்பம் இருந்தால் கிள்ளிப் பாருங்கள். 12 மணி நேரத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதில் இருந்து மாறுபட்ட தோற்றமோ அல்லது உணர்வோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், தோலில் வெட்டுக் காயமோ அல்லது தீக்காயமோ ஏற்படுத்தினால், இரவில் ஏற்படும் அதுமாதிரியான காயம் ஆறுவதைக் காட்டிலும் பகல் நேரத்தில் ஏற்படும் காயம் இரண்டு மடங்கு வேகமாக ஆறிவிடும்.

இந்த மாறுபாடு தோலையும் தாண்டியதாக இருக்கிறது. பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் ப்ளூ காய்ச்சல்பாதிப்பு இருந்தால், காலை நேரத்தில் மருத்துவரை சந்திக்க நேரம் வாங்கிடுங்கள். ஆறு மணி நேரத்துக்குப் பிறகு இருப்பதைவிட, காலை 9 முதல் 11 மணிக்குள் ஊசி போட்டுக் கொண்டால் நோய்த் தடுப்புக் கிருமிகளின் பாதுகாப்பு நான்கு மடங்கு அதிகமாகக் கிடைக்கும். இருதய அறுவை சிகிச்சையாக இருந்தால், இதற்கு நேர் எதிரான கருத்து சரியாக வரும். பிற்பகலில் உடலில் கத்தி வைத்தால் நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகமாக இருக்கும்.

இரவில் தீக்காயங்களுக்கு ஆளானவர்கள் குணமாவதற்கு, பகலில் தீக்காயம் அடைந்தவர்களுக்குக் குணமாவதைக் காட்டிலும் சுமார் 11 நாட்கள் அதிகமாகும்.

சொல்லப் போனால், மூளை தொடங்கி, நோய் எதிர்ப்பு மண்டலம் வரையிலான செயல்பாடுகளை நீங்கள் பார்த்தால், உடல் செல்கள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் 24 மணி நேர இசைவு – உடல் இயக்க இசைவு நிலை என குறிப்பிடப்படும் – தொற்று மற்றும் காயங்களில் இருந்து நாம் உடல் ரீதியாக மீண்டு வருவதை தீர்மானிப்பதாகத் தெரிகிறது.

“உடல் ரீதியாக நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது இரவு நேரத்தில் இருந்து பகல் நேரத்தில் மாறுபட்டதாக இருக்கிறது” என்று கனடாவில் ஆன்டாரியோவில் உள்ள குயூல்ப் பல்கலைக்கழகத்தில் இருதய நோய் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாமி மார்ட்டினோ கூறுகிறார். இந்தப் புதிய அறிவார்ந்த விஷயத்தை மனிதர்கள் மற்றும் விலங்குகள் மருத்துவத்தில் பயன்படுத்த அவர் முயற்சி செய்து வருகிறார். புற்றுநோய் முதல் இருதய நோய்கள் வரை, மூட்டு வலி முதல் அலர்ஜிகள் வரை, இந்த உடலியக்க இசைவைப் புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் மருந்துகளைக் கொடுத்தால் அதிக பயன்களைத் தரும், எந்த நேரத்தில் கொடுத்தால் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு உதவியாக இருக்கும். இந்த இசைவுநிலையை வலுப்படுத்துவதன் மூலம், நோயாளிகள் சீக்கிரம் குணமாவதற்கும், நோய்களின் உடல் ரீதியான அறிகுறிகள் சிலவற்றைக் குறைப்பதற்கும் வழி காண முடியும்.

“உடலியக்க நேர மருத்துவம் மனித ஆரோக்கியத்தை கையாளும் அணுகுமுறையை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையாக உள்ளது” என்கிறார் மார்ட்டினோ. “மரபணு சிகிச்சை, ஸ்டெம்செல் சிகிச்சை, செயற்கைப் புலனறிதல் சிகிச்சை போன்றவற்றுக்கு இணையாக உயர்வான நிலையில் உள்ள சிகிச்சையாக, நோய்களின் உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள்வதில் மிகவும் நம்பகமான புதிய தொழில்நுட்பங்களில் ஒன்றாக இது இருக்கிறது.”‘

ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நமது உடல் இயக்கத்தின் தன்மை மாறுபடுகிறது என்பது, உண்மையில், பழங்காலத்து விஷயம். காய்ச்சலின் தன்மை 24 மணி நேரத்தில் எப்படி மாறுபடுகிறது என்பதை கிரேக்க மருத்துவர் ஹிப்போகிராட்ஸ் கவனித்து வைத்திருந்தார். உடலின் வெவ்வேறு உறுப்புகளின் இயக்க நிலை வெவ்வேறு நேரங்களில் எப்படி மாறுபடுகிறது – அதிகாலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல், காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இருதயம், மாலை 5 மணி முதல் 7 மணி வரை சிறுநீரகங்கள் என – சீன பாரம்பரிய மருத்துவம் விவரித்துள்ளது. இருந்தபோதிலும், நோயுற்ற நிலை மற்றும் சிகிச்சைகளில் நமது உடலின் கடிகாரத்தின் தாக்கம் பற்றி புதிய ஆர்வம், நவீன மருத்துவத்தில் இருந்து மாறுபட்டதாக உள்ளது. ஆய்வுகள் அதிகரித்து வருவதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

நமது உந்துதல்கள், மனப்போக்கு மற்றும் உயிரிவேதியல் தன்மைகளுக்கு ஏற்ப நாம் இருக்கும் சுற்றுச்சூழலில் நமது வழக்கமான செயல்பாடுகளுக்கு இந்த உடல் கடிகார இசைவு நிலை நம்மைத் தயார் செய்கிறது. வெளிச்சம் மற்றும் இருட்டு என்ற தினசரி சுழற்சியால் இந்த இசைவு கட்டுப்படுத்தப் படுகிறது. குணமாக்குதல் என்பது வரும்போது, இரவைக் காட்டிலும் பகல் நேரத்தில் ஏன் அதிக பயன் கிடைக்கிறது என்பதற்கு நல்லதொரு காரணம் இருக்கிறது.

ப்ளூ காய்ச்சலுக்கான ஊசி மருந்தை காலையில் போட்டுக் கொள்வது, பிற்பகலில் போட்டுக் கொள்வதைவிட அதிகமான பாதுகாப்பை உங்கள் உடலுக்குத் தரும்ப்ளூ காய்ச்சலுக்கான ஊசி மருந்தை காலையில் போட்டுக் கொள்வது, பிற்பகலில் போட்டுக் கொள்வதைவிட அதிகமான பாதுகாப்பை உங்கள் உடலுக்குத் தரும்

“உடலுக்கான நேரத்தில் காயங்களைக் குணப்படுத்திக் கொள்ளும் வகையில் நமது செல்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அப்போது தான் அது பெரும்பாலும் நிகழும்” என்று பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியல் துறையின் மருத்துவ ஆராய்ச்சிக் குழுவில் உள்ள உடல் இயக்க நேர உயிரியலாளர் ஜான் ஓ’நெயில் கூறியுள்ளார். “மனிதர்களுக்கு நடு இரவில் தூக்கத்தில் இருக்கும் போது பெரிய காயங்கள் ஏற்படுதவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் பகல் பொழுதில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்” என்கிறார் அவர். தோலின் செல்களை ஒட்டச் செய்வதற்கான புதிய பசை போன்ற திரவத்தை பரவச் செய்வதன் மூலம் திசுக்களை சரி செய்ய உதவக் கூடிய எலும்புப் புரத உயிரணு, பகல் நேரத்தில் அதிக வேகமாக காயமடைந்த பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றன என்று அவருடைய சொந்த ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார்.

“உடலுக்கான நேரத்தின் செயல்பாட்டின் அடிப்படையில் மட்டும் சுமார் இரண்டு மடங்கு அளவுக்கு குணமாக்கலில் வித்தியாசம் இருப்பதை நாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்திருக்கிறோம்” என்று ஓ’நெயில் தெரிவிக்கிறார். சர்வதேச தீக்காய தகவல் தொகுப்பில் இருந்து தகவல்களை அவர்கள் ஆய்வு செய்ததில், இரவு நேரத்தில் தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு குணமாவதற்கு, பகல் நேரத்தில் தீக்காயம் ஏற்பட்டவர்களைவிட 11 நாட்கள் அதிகம் தேவைப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்தது.

நமது நோய்த் தடுப்பு மண்டலமும், தொற்றுகளுக்கு எதிர்வினையாற்றுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் உடல் இயக்க இசைவு நிலைக்கு ஆட்பட்டதாகவே இருக்கிறது. நோய்க் கிருமிகளுக்கான சிகிச்சை ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்துக்கு ஏற்ப மாறுபடும் என்பதை அறிவதற்கு முதலில் விநோதமாகத்தான் இருக்கும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் வைராலஜி பெண் நிபுணர் ராச்செல் எட்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நோய்த் தடுப்பு மண்டலத்தின் தீவிர செயல்பாடுகளுக்கு எதிராக நம்மைப் பாதுகாக்கும் அம்சமாக இது இயல்பாகவே உருவாகியிருக்கலாம்.

“உண்மையிலேயே பெரிய எரிச்சல் உணர்வு உங்களுக்குத் தோன்றினால், அதை உங்களால் கட்டுப்படுத்த முடிய வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்” என்கிறார் எட்கர்.

உடல் இயக்க நேர இசைவுகளுக்கும் அக்கிகள் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி அந்தப் பெண் ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து வருகிறார். எலிகளில் நடத்திய ஆராய்ச்சியில் ஓய்வு நேரத்தில், அதிகாலை நேரத்தில் – அக்கி வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் எலிகளில், செயல்பாடு தொடங்கும் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகளைவிட 10 மடங்கு அதிகம் திரும்ப வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை அவருடைய ஓர் ஆய்வில் கண்டறிந்தார். நோய்த் தடுப்பாற்றல் முறைமையின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்களால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று அவருடைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட செல்களின் தினசரி உடல் இயக்க நேர இசைவு நிலையே, வைரஸ் தொற்றின் பாதிப்பு அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை ப்ளூ தடுப்பு மருந்தை பிற்பகலில் தருவதைவிட காலையில் தருவது கூடுதல் பயனைத் தருகிறது என்று கண்டறியப்பட்ட சமீபத்திய விஷயத்துடன் இந்த ஆய்வு ஒத்துப்போகிறது. அப்போதும்கூட, நோயுறுவதற்கு ஏற்ற காலம் என்பது மிகவும் எளிதாக அறியக் கூடியது என்று எச்சரிக்கிறார் எட்கர்.

“வெவ்வேறு தொற்றுக் கிருமிகளுக்கு அது வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது” என்று அந்தப் பெண் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

ரத்தத்தில் நச்சு ஏற்படுதலை எடுத்துக் கொண்டால், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை சரி செய்வதற்கான மருந்தை – ரத்தத்தில் காணப்படும் பாக்டீரியாவின் மீது மூலக்கூறுகளை செலுத்தி எதிர்ப்பை தூண்டிவிடலாம். இதை எலிகளுக்கு “இரவில்” செலுத்தியதில் 20 சதவீதம் மட்டுமே உயிர்பிழைத்தன. ஆனால் அவை செயல்பாட்டில் உள்ள (பகல் நேரத்தில்) மருந்தை செலுத்தினால் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை உயிர் பிழைத்தன.

சில மருந்துகளை மாலையில் எடுத்துக் கொள்வதைவிட காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது, அதன் தாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.மருந்துகளை மாலையில் எடுத்துக் கொள்வதைவிட காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது, அதன் தாக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

புதிதாகக் கண்டறியப்பட்ட விஷயங்கள் தொற்றும் தன்மையுள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் புதிய வாய்ப்புகளை காட்டியுள்ளன.

“ஒரு வைரஸ் குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள செல்களுக்குப் பரவுகிறது என்று நாம் அறிந்து கொண்டால், அவை அதிக செயல்பாட்டில் இருக்கும் சமயத்தில் நாம் வைரஸ் அழிப்பு மருந்தை கொடுப்பது சரியாக இருக்கும்” என்கிறார் எட்கர். “அவ்வாறு செய்வதன் மூலம், நோயாளிக்கு தர வேண்டிய வைரஸ் எதிர்ப்பு மருந்தின் அளவு குறையும். நோயாளி ஒத்திசைவிலும் நல்ல பலன் கிடைக்கும்” என்று குறிப்பிடுகிறார்.

இந்த அணுகுமுறையால் தொற்றுகளுக்கு எதிரான சிகிச்சையில் மட்டும் பயன் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை – உலக மருத்துவமனைகளில் காணப்படும் 250 மருந்துகள் – செல்களின் கடிகார நேரத்தால் கட்டுப்படுத்தப்படும் மூலக்கூறு கிருமிகளை தாக்குவதாகத் தெரிகிறது. எந்த நேரத்தில் மருந்தை எடுத்துக் கொள்கிறார் என்பதைப் பொருத்து அது அதிக அல்லது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆஸ்பிரின் மற்றும் இபுபுரோபென் போன்ற வலி நிவாரணிகளாக இருந்தாலும், ரத்த அழுத்தம், குடற்புண், ஆஸ்துமா மற்றும் புற்றுநோயாக இருந்தாலும் இதில் அடங்கும்.

பல சமயங்களில், மருந்துகள் ஆறு மணி நேரத்துக்கும் குறைவான அவகாசத்தில் பாதி வீரியத்தை இழந்துவிடும். அதாவது பொருத்தமில்லாத நேரத்தில் எடுத்துக் கொண்ட மருந்து, நீண்ட நேரம் உடலில் தங்கி வேலை செய்யாது. உதாரணமாக, வல்சர்ட்டன் என்ற ரத்த அழுத்த மருந்து காலையில் முதலாவது விஷயமாக எடுத்துக் கொள்வதைவிட, மாலையில் எடுத்துக் கொள்வது 60 சதவீதம் அதிக பயனைத் தரும். ஆஸ்பிரின் மாத்திரையை மாலையில் எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. தூசிகளால் மூக்கு மற்றும் கண்களில் ஏற்படும் அலர்ஜிக்கான சில ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகளும் இதே போலத்தான் செயல்படுகின்றன.

நமது உடல் இயக்க இசைவுநிலையை நேரத்துக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவது எது?

நோயுறுவதற்கு ஒரு நாளில் மோசமான நேரம் எது?

உடல் இயக்க இசைவுநிலைகள் உடலில் ஒவ்வொரு செல்களிலும் உருவாக்கப் படுகின்றன. ஆனால் வெளியில் உள்ள நாளின் நேரத்துக்கு ஏற்ப, வெளிச்சம் மற்றும் இருட்டுக்கு வழக்கமாக ஆட்படும் நேரத்துக்கு ஏற்ப செல்களுக்குள் ஒருங்கிணைப்பு நடைபெறுகிறது. இரவில் மிகுந்த வெளிச்சத்துக்கு ஆட்பட்டால் இந்த இசைவுநிலையின் நேரத்தை தாமதப்படுத்தும். அதேசமயத்தில் விடியலுக்கு அடுத்து பிரகாசமான வெளிச்சம் வந்தால் அந்த இசைவுநிலை நேரத்தை வேகப்படுத்தும்.நாம் சாப்பிடும் நேரத்தை மாற்றுவதன் மூலமும் அவை மாற்றப்படலாம்.

வெவ்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களின் இசைவுநிலை நேரங்கள் ஒரே நேரத்தில் மாறுவது இல்லை, வெளிச்சம் மற்றும்இருட்டுக்கு ஆட்படுவதைப் பொருத்து மாறுபடும், உடல் எதிர்பார்க்காத நேரத்தில் சாப்பிடுவதாலும் மாறுபடும். அப்போது ஒன்றுக்கொன்று இசைவு இல்லாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

கதிர்வீச்சு சிகிச்சையை காலையில் தருவதைவிட பிற்பகலில் தரும் போது அதிக பலன் கிடைக்கிறது என்று சமீபத்தில் மனிதர்களைக் கொண்டு நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எந்த நேரத்தில் மருந்து கொடுத்தால் சிகிச்சை அதிக பயன் தரும் என்று அறிவது, சொல்வதைப் போல அவ்வளவு எளிதானது கிடையாது. எந்த நேரத்தில் மருந்து கொடுப்பது சரியாக இருக்கும் என்பதைக் கண்டறிய முறைப்படி சோதனைகள் தொடங்குவதாக இருந்தால், ஆய்வகப் பரிசோதனை செலவுகள் அதிகமாகும். நோயாளிகளை அவ்வாறு பரிசோதனை செய்ய வைப்பதிலும் பிரச்சிை உள்ளது. வரசையான சிகிச்சைகளை ஒரு முறை அவர்களை செய்ய வைப்பதே கடினமாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் மருந்தை அவர் எடுத்துக் கொள்வதை உறுதி செய்வது அதைவிட கடினமானதாக இருக்கும்.

உடலின் நேரத்துக்கு ஏற்ப மருந்து கொடுக்கும் சிகிச்சை முறையில் ஆர்வம் இருந்தாலும், மருந்து நிறுவனங்கள் இதில் நிறைய முதலீடு செய்யாததற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று ஓ’நெயிலும் மற்றவர்களும் கருதுகின்றனர்.

ஒவ்வொருவருடைய உடல் இயக்க நேரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்மில் சிலர் வானம்பாடிகளாகவும் (பகலில் வேலை பார்ப்பவர்கள்) சிலர் இரவு நேர ஆந்தைகளாகவும் இருக்கிறோம். மக்கள் தொகையில் கணிசமானவர்கள் இரவுநேரப் பணியில் இருப்பவர்கள். அது அவர்களுடைய உடல் இயக்க ஒத்திசைவு மற்றும் ஆரோக்கியத்தில் அதற்கான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்திலும், தனிப்பட்ட ஒருவருடைய உடல் இயக்க கடிகாரம் எங்கே இருக்கிறது என்பதை உறுதி செய்வது எளிதானதாகவோ, விரைவானதாகவோ இல்லை.

மருத்துவமனைகளில் இரவில் நிறைய செயற்கை வெளிச்சம் உள்ளது. அது நோயாளிகளின் தூக்கத்தை பாதிப்பது மட்டுமின்றி அவர்களுடைய உடல் குணமாக்கலையும் பாதிக்கிறது.

மருத்துவமனையின் சூழலையும் கவனிக்க வேண்டும் – பல நவீன மருத்துவமனை கட்டடங்களில் ஜன்னல்கள் சிறியதாக உள்ளன. மங்கலான விளக்குகள் உள்ளே பொருத்தப்பட்டு, பகல் மற்றும் இரவில் அவை ஒளிரச் செய்யப் பட்டிருக்கின்றன. இது பிரச்சினைக்குரியது. ஏனெனில் பகலில் குறைவான வெளிச்சம் இருப்பதும், இரவில் செயற்கை வெளிச்சம் இருப்பதும் நமது உடல் இயக்க ஒத்திசைவையும், தூக்கத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும்.

தவறாக உருவாக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட ஒத்திசைவுகள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சாதாரணமாக ஏற்படக் கூடியதாக உள்ளன. மார்பின் உள்ளிட்ட சில மருந்துகளும், இந்தப் பிரச்சினையை அதிகப்படுத்தி, உடல் இயக்க கடிகாரத்தை மாற்றிவிடுகின்றன, நோயாளிகள் தூக்கத்தில் இருக்கும்போது – குணமாக்கலுக்கு முக்கியமான நேரம் – வலி, கவலை அல்லது சப்தம் போனறவற்றால் மேலும் இடையூறுக்கு ஆட்படுகிறார். அவர்கள் குணமடைவது மற்றும் உயிர்பிழைப்பதன் வாய்ப்பில் இது எந்த அளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்ற கேள்விகளும் எழுகின்றன.

இருதய நோயாளிகளிடம் இருந்து சில வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மற்ற திசுக்களைப் போல, இருதய மண்டலத்திலும் வலுவான உடல் இயக்க ஒத்திசைவு உள்ளது – நாம் தூங்கும் போது இதயத் துடிப்பும்,ரத்த அழுத்தமும் குறைந்தபட்ச அளவில் இருக்கும். ஆனால் எழுந்திருக்கும் போது வேகமாக அதிகரிக்கும். நமது பிளேட்லெட்கள், ரத்தத்தை உறையச் செய்ய உதவும் சிறிய ரத்த அணுக்கள் ஆகியவை பகல் நேரத்தில் ஒட்டும் தன்மையுடன் இருக்கும். ரத்தக் குழாயில் ரத்தம் ஓடும் பாதையின் குறுக்களவை சுருங்கச்செய்து, இதயத்தை வேகமாக துடிக்கச் செய்யும் அட்ரீனலின் போன்ற ஹார்மோன்கள் பகல் நேரத்தில் அதிகமாக இருக்கும். இதுபோன்ற உடல் இயக்க ஒத்திசைவு மாறுபாடுகள் ஏற்படும்போது, தீவிர மாரடைப்பு போன்ற இருதயம் தொடர்பான நிகழ்வுளின் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

“அவசர சிகிச்சை வார்டுகளுக்கு வரக் கூடியவர்களின் தகவல்களைக் கவனித்தால் மாரடைப்பு பாதிப்பு காலை 6 மணியில் இருந்து மதியத்துக்குள் ஏற்பட்டிருக்கும், அந்த நாளின் வேறு நேரங்கள் அல்லது இரவு நேரத்தைவிட இந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிகமாக இருப்பார்கள்” என்று மார்ட்டினோ தெரிவிக்கிறார். இருந்தபோதிலும், இருதயப் பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதில் கால நேரமும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சமீபத்தில் நடத்திய ஓர் ஆய்வில், காலை நேரத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை விட, பிற்பகலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடுத்த 500 நாட்களில் பெரிய இருதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியளவு தான் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. எல்லா நோயாளிகளுக்கும் பிற்பகலில் அறுவை சிகிச்சைசெய்தால், 11 நோயாளிகளில் ஒருவருக்கு ஏற்படும் பெரிய பாதிப்பைத் தவிர்த்துவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். மாரடைப்பு அல்லது இருதய அறுவைச சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதற்கு, பகல்நேர வெளிச்சத்துக்கு அதிகளவு ஆட்படுபவர்கள் உயிர் பிழைத்தல் மற்றும் , மருத்துவமனையில் இருந்து சீக்கிரம் வெளியேற வாய்ப்பு உள்ளது என்று மற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது ஏன் நடக்கிறது என்பதை விலங்குகள் மீதான ஆய்வுகள் விளக்குகின்றன. மார்ட்டினோவும் அவருடைய சகாக்களும் எலிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தி வெளிச்சம் – இருட்டு சுழற்சிகளுக்கு இடையூறுகளுடன் ஆட்படுத்தியும் அல்லது சாதாரணமாக ஆட்படுத்தியும் பரிசோதனை செய்தனர். இருதயத்தை நோக்கி விரைந்து சென்ற நோய்த் தடுப்பு செல்களின் வகையிலும், எணணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். அதன் விளைவாக உயிர் பிழைக்கும் வாய்ப்பிலும் மாற்றம் இருந்தது.

மருத்துவமனையில் இருப்பதைப் போல, உடல் இயக்க ஒத்திசைவு இடையூறுகளுக்கு ஆட்படுத்தப்பட்ட எலிகள், இருதயப் பிரச்சினையால் இறந்து போகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. மேற்கொண்டு ஆய்வு நடத்தியதில், எந்த நேரத்தில் பாதிப்பு ஏற்பட்டது என்பதைப் பொருத்து, பாதிக்கப்பட்ட இருதயத்துக்குள் நோய்த் தடுப்பு செல்கள் எந்த அளவுக்கு, எந்த எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன என்பதிலும் மாறுபாடுகள் இருப்பது கண்டறியப் பட்டது.

“சில தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இரவில் மின்விளங்குகள் மங்கலாக குறைக்கப்படும். அது சற்று உதவிகரமாக இருக்கும். ஆனால், சில இடங்களில் மங்கலாக்கப் படுவதே இல்லை” என்கிறார் மார்ட்டினோ. “உதாரணமாக, அவசர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளி கொண்டு வரப் படும்போது படுக்கை கிடைக்காவிட்டால், இரவு முழுக்க அவர் பிரகாசமான வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் – அல்லது மாரடைப்பு பாதிப்பிலும் இரவு முழுக்க வெளியில் காரிடாரிலேயே இருக்க வேண்டும். அதனால் முதல் இரண்டு நாட்களுக்கு அவருடைய தூக்கமும், உடல் இயக்க நேர ஒத்திசைவும் அதிகம் பாதிக்கப்படும். அந்த நாட்கள் தான் குணமாக்கலுக்கு முக்கியமான நாட்களாக இருக்கும்.”

எனவே, அதற்கு என்ன செய்ய வேண்டும்? உடலுக்கு எந்த நேரம் பொருத்தமானதோ அந்த நேரத்தில் அறுவை சிகிச்சையை செய்வது ஒரு தீர்வு. இருதய அறுவை சிகிச்சைக்கு, அது பிற்பகலாக இருக்கலாம். ஆனால், வேறு குறுக்கீடுகள் இருந்தால் அது மாறுபடலாம். உதாரணமாக, பகல் நேரத்தில் காயம் ஏற்பட்டால் பசை தன்மை திரவம் பரவுதல் அதிகமாக இருக்கிறது என்று காயங்களை குணமாக்குதல் குறித்த ஓ’நெயிலின் ஆய்வில் தெரி வந்திருக்கிறது. இது பெரிய தழும்பை ஏற்படுத்தலாம்.

பிற்பகல் நேரத்தில் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்வது நோயாளி மீண்டு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். ஆனால் அது பெரிய தழும்பை ஏற்படுத்தக் கூடும்.
Image captionபிற்பகல் நேரத்தில் அறுவை சிகிச்சையை வைத்துக் கொள்வது நோயாளி மீண்டு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். ஆனால் அது பெரிய தழும்பை ஏற்படுத்தக் கூடும்.

“அழகுக்கான அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, மாலையில் தாமதமாக – அல்லது இரவில் – செய்வது நல்லதாக இருக்கும், குணமாக தாமதமாகும் என்றாலும்,லேசான தழும்பை தான் ஏற்படுத்தும் என்ற வாதமும் உள்ளது” என்கிறார் அவர். இதை யாரும் பரிசோதித்துப் பார்க்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

24 மணி நேரத்தில் வெளிச்சத்தின் அளவை மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில், மனிதர்களின் உடல் இயக்க நேரத்துக்கு ஏற்ற ஒளி அைப்பை செயற்கையாக மருத்துவமனையில் ஏற்படுத்தி, வெளிப்புறத்தில் உள்ளதைப் போன்ற வெளிச்ச சூழலை உருவாக்குவது மற்றொரு தீர்வாக முன்வைக்கப் படுகிறது. டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் உள்ள குளோஸ்ட்ரப் மருத்துவமனையில், மாரடைப்பு பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில், இதுபோன்ற ஒளி அமைப்பு முறையின் தாக்கத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். வழக்கமான ஒளி அமைப்பு உள்ள வார்டுகளில் உள்ளவர்களைக் காட்டிலும் இந்த வார்டுகளில் உள்ள நோயாளிகளிடம் உடல் இயக்க நேர ஒத்திசைவில் அதிக மாற்றம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனை நோயாளிகளின் உடல் இயக்க நேர ஒத்திசைவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மரு்துகளை உருவாக்குவது சாத்தியமானதாக இருக்கலாம் – அல்லது குணமாவதற்குப் பொருத்தமான நேரம் வரையில் அறுவை சிகிச்சையை நீட்டிக்கலாம். இதுபோன்ற மூலக்கூறுகள் ஏற்கெனவே விலங்குகள் மூலம் பரிசோதனை செய்யப் படுகின்றன, அவற்றுக்கு நல்ல பயன்கள் கிடைத்துள்ளன.

“எதிர்காலத்தில், உடல் இயக்க நேரத்துக்கு ஏற்ற மாத்திரைகள் வரக்கூடும். அல்லது இருதய நோய்களை குணமாக்க வெளிச்சம் இருப்பது அல்லது வெளிச்சம் இல்லாதிருப்பது என்ற சூழ்நிலைகள் வரலாம்” என்கிறார் மார்ட்டினோ.

வெளிச்சம், தூக்கம் மற்றும் நேரம் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த மூன்று அடிப்படை விஷயங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

SHARE