இலங்கையின் தாமதங்கள் குறித்து கவலையை வெளிப்படுத்திய இணை அனுசரணை நாடுகள்

17

பொறுப்புக்கூறல் விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் தாமதங்களையும் நல்லிணக்கத்தை கையாள்வதில் இலங்கை அரசாங்கம் தவறவிட்டுவரும் நகர்வுகளையும் தமிழர் தரப்பு கடுமையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் தாமதங்களை கண்டித்து தற்போது மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா கொண்டுவந்துள்ள அறிக்கையை நாம் முழுமையாக ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் தாமதங்கள் குறித்து இணை அனுசரணை நாடுகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

SHARE