அணு உலைகள் விரைவில் மூடப்படும்

21

ஜப்பானிலுள்ள அணு உலைகள் அனைத்தும் விரைவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் புதிய சுற்றுப்புற அமைச்சர் Shinjiro Koizumi இதனைத் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற Fukushima அணுச்சக்திப் பேரிடர் மீண்டும் நேர்வதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், Shinjiro Koizumi குறித்த திட்டத்திற்கு ஆளும் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானிர் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக Fukushima உள்ள மூன்று அணு உலைகளில் அணுக்கசிவு ஏற்பட்டது.

இதன்காரணமாக குறித்த பகுதியிலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE