பெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும் சக்தி கொண்டது

51

ஒரு பெரிய விண்கல் மனிதகுலத்தைத் தாக்கும், அந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க நம்மிடம் எந்த வழிகளும் இருக்காது என்று ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk) கணித்து கூறியுள்ளார்.

எகிப்திய வரலாற்றில் ‘குழப்பங்களின் கடவுள்’ (God of Chaos) என்று அழைக்கப்படும் அப்போபிஸ் (Apophis) என அந்த கடவுளின் பெயரால் பெயரிடப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய விண்கல் மிக அருகில் மிகவும் ஆபத்தான தொலைவில் இந்த பூமியை நெருங்கும், அதாவது பூமியின் நிலப்பரப்பிலிருந்து 19,000 மைல்கள் (31,000 கிலோமீட்டர்) தொலைவில் பூமியை நெருங்கும்.

“சிறந்த பெயர்! அது பற்றி இப்போது கவலைப்பட தேவையில்லை, ஆனால் ஒரு பெரிய விண்கல் இறுதியில் பூமியைத் தாக்கும் மற்றும் அந்த தாக்குதலில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மிடம் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று மஸ்க் திங்களட்கிழமை ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 13, 2029 அன்று, ஒரு ஒளி வெளிச்சம் வானம் முழுவதும் பரவி, பிரகாசமாகவும் வேகமாகவும் வரும்.

ஒரு கட்டத்தில் அது முழு நிலவின் அகலத்தை விட பெரிதாக காணப்படும், மேலும் ஒரு நிமிடத்திற்குள் அது நட்சத்திரங்களைப் போல பிரகாசமாக மாறிவிடும்.

ஆனால் அது ஒரு செயற்கைக்கோள் அல்லது விமானமாக இருக்காது – இது 1,100 அடி அகலமுள்ள, “அபோபிஸ்” என்று அழைக்கப்படும் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் விண்கல்லாக இருக்கும், இது பூமிக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பயணிக்கும்.

“2029 ஆம் ஆண்டில் அப்போபிஸின் நெருங்கிய அணுகுமுறை, அறிவியலுக்கு நம்பமுடியாத வாய்ப்பாக இருக்கும்” என்று கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (NASA’s Jet Propulsion Laboratory) ரேடார் விஞ்ஞானி மெரினா ப்ரோசோவிக் (Marina Brozovic) கூறியுள்ளார், அவர் பூமிக்கு அருகிலுள்ள பொருட்களின் (NEOs) ரேடார் கண்கானிப்பு துறையில் பணியாற்றுகிறார்.

மேலும் பேசுகையில் “ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் மூலம் விண்கல்லை நாங்கள் கண்கானிப்போம். ரேடார் கண்கானிப்புகள் மூலம், சில மீட்டர் அளவிலான மேற்பரப்பு விவரங்களை நாம் காண முடியும்,” என்று அவர் கூறினார்.

இந்த அளவிலான ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்வது அரிது.

விஞ்ஞானிகள் 5-10 மீட்டர் வரிசையில், சிறிய விண்கற்களைக் கண்டறிந்தாலும், பூமியால் இதே தூரத்தில் பறக்கும், அபோபிஸின் அளவு விண்கற்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு, எனவே இது பூமிக்கு அருகில் அடிக்கடி செல்ல கூடாது.

நகரும் நட்சத்திரம் போன்ற ஒளியின் புள்ளியைப் போல தோற்றமளிக்கும் இந்த விண்கல், தெற்கு அரைக்கோளத்தின் மீது இரவு வானத்தில் வெறும் கண்களுக்கே தென்படும். மேலும் இந்த விண்கல் கிழக்கு கடற்கரையிலிருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை வரை பூமியின் மேலே பறக்கும். அது பின்னர் இந்தியப் பெருங்கடலைக் கடக்கும், கிழக்கு அமெரிக்காவில் பிற்பகலுக்குள், அது பூமத்திய ரேகை தாண்டி, மேற்கு நோக்கி, ஆப்பிரிக்காவிற்கு மேலே நகரும்.

“தற்போதைய கணக்கீடுகள் அப்போபிஸுக்கு இன்னும் பூமியை பாதிக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாகக் காட்டுகின்றன, அதன் இப்போது 100,000-த்திற்கு 1 என்பதற்கும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் அதன் நிலையின் எதிர்கால அளவீடுகள் சாத்தியமான பாதிப்புகளை நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்” என்று நாசா சமீபத்தில் கூறியுள்ளது.

அப்போபிஸ் என்பது தற்போது அறியப்பட்ட சுமார் 2,000 அபாயகரமான விண்கற்களில்(PHAs) ஒன்றாகும்.

“சிறிய பனிச்சரிவுகள் போன்ற சில மேற்பரப்பு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று ஜேபிஎல்லின் (JPL) வானியலாளரான டேவிட் பார்னோச்சியா (Davide Farnocchia) வலைப்பதிவு ஓன்றில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE