ஹிஸ்புல்லாஹ் மற்றும் பசீர் சேகுதாவூத் அவர்களே இவ்வளவு கேவலமாக சமூகத்தை ஏமாற்றுவீர்களா?

116

 

ஹிஸ்புல்லாஹ் மற்றும் பசீர் சேகுதாவூத் அவர்களே இவ்வளவு கேவலமாக சமூகத்தை ஏமாற்றுவீர்களா?

தேர்தல் அறிவிப்பு வந்ததும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தான் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க இருப்பதை அறிவித்தார். ஊரூராக கலந்துரையாடல்களை நடாத்தினார். இணையத்தள தொலைக்காட்சிகளிலெல்லாம் பேட்டிகொடுத்தார். அதன்பின் திடீரென மௌனமானார்?

ஏன் ?

வேட்புமனுத் தாக்கலுக்கு நான்கைந்து நாட்கள் முன்னதாக அதே மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் திடீரென ஒருவர் போட்டியிடவேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாக கட்டுரை எழுதினார்.

இதைக் கண்ட முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஐந்தாம் திகதி ஶ்ரீ சு கட்சியின் முடிவின்பின் தனது முடிவை அறிவிக்கப்போவதாக சொன்னார்.

திடீரென, அந்த முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் கட்டுப்பணம் செலுத்தினார்.

அதன்பின், விழுந்தடித்துக்கொண்டுபோய் முன்னாள் ஆளுநர் பசீர் சேகுதாவூத் கட்டுப்பணம் செலுத்தினார்.

இறுதியில் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் போட்டியிடவில்லை. ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுகிறார்.

இவற்றிற்கிடையே உள்ள தொடர்பைச் சிந்திக்கின்றீர்களா?

போட்டியிடுவதாக அறிவித்த முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வின் திடீர் மௌனத்தைத் தொடர்ந்து போட்டியிடும் சமிக்ஞையை வழங்கிய முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் போட்டியென்றதும் ஏன் ஒதுங்கினார்? சிந்தித்தீர்களா?

போட்டியிடுவதாக அறிவித்து பின் தயங்கிய ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை தூண்டுவதற்காக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆடிய நாடகம்தான் போட்டியிடும் அறிவிப்பு; என்பது புரிகிறாதா?

அவ்வாறாயின் இருவரையும் இயக்குகின்ற இடம் ஒன்றுதான் என்பது புரிகிறதா?

இவர்களின் இந்த சமூகத்துரோகத்தை சிந்திக்கும் ஆற்றலற்ற சமூகமா? நாம்.

இவ்வளவு கேவலமாக சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கிறார்களே! என எண்ணும்போது உள்ளம் ரணகளமாகிறது.

SHARE