கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதறடிக்க ஐக்கிய தேசிய கட்சி எய்துள்ள அம்பே மகேஷ் சேனாநாயக்க

62

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வாக்குகளை சிதறடிக்க ஐக்கிய தேசிய கட்சி எய்துள்ள அம்பே முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்தார்.

அத்துடன் ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு  கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர்  மாத்திரம் பொறுப்பு கூற வேண்டிய தேவை கிடையாது. இராணுவ தளபதி என்ற ரீதியில் இவரும் பொறுப்பு கூற வேண்டும்.

பொதுஜன பெரமுனவின்  வெற்றியை தடுப்பததற்கு எவர் களமிறங்கினாலும் அது எவ்வித தடைகளையும் ஏற்படுத்தாது. அனைத்து இன மக்களின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

வியத்மக அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

SHARE