முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன்

97

இப்போது பக்குவம் வந்துவிட்டது - இலியானா

நடிகை இலியானா இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’வயதை பொறுத்தே முடிவுகள் எடுக்கும் அனுபவம் வரும். சினிமா துறைக்கு வந்த புதிதில் கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தேன். தெலுங்கில் அறிமுகமாகி தமிழ், இந்தி என்று எல்லா மொழி படங்களிலும் வந்தேன்.
இலியானாஆனால் இப்போது முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன். எந்த மாதிரி கதைகளில் நடித்தால் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்க முடியும் என்று கதைகள் தேர்வில் பக்குவம் வந்து இருக்கிறது. ரசிகர்கள் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
SHARE