பெண்கள் சார்ந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பிடிக்கும். 

43

நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை - ஸ்ரீ பிரியங்கா

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் மிக மிக அவசரம். பெண் போலீசார் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்ட இந்த படம் வெளியாகும் முன்பே விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் 11ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என பெயர் எடுத்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பெண் போலீஸ் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா கூறும்போது, ‘போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டும் அல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன்.
பொதுவாக ஒரு நாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை.
ஸ்ரீபிரியங்காஇந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணவே மாட்டேன். சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்.
என்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது.