தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்

92

அஜித், விஜய் குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான்

திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். டுவிட்டரில் #AskSRK எனும் ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார்.
ஷாருக்கானின் டுவிட்டர் பதிவுஇந்த உரையாடலின் போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் குறித்து ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அஜித் பற்றிப் பேசிய அவர், ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார். விஜய் பற்றிக் கூறுமாறு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ‘அற்புதமானவர்’ எனப் பதிலளித்தார் ஷாருக்கான். தனுஷ் பற்றி கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனப் பதிலளித்தார்.
SHARE