ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 192 மில்லியன் ரூபா நஷ்டம்

50

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களாக மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் 192 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, போக்குவரத்து அமைச்சர், சம்பள நிர்ணய சபையின் தலைவர் ஆகியோருடன் ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.

இந் நிலையில் நேற்று முதல் அனைத்து ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE