இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ள இந்திய வீரர்

42

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 395 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா அணி 4வது நாள் முடிவில் 11 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது.

இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடர்ந்தது, 10வது ஓவர் வீசிய அஸ்வின், தென் ஆப்பிரிக்கா வீரர் Theunis de Bruyn போல்டாக்கினார். இது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கைப்பற்றிய 350 விக்கெட் ஆகும்.

இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் உலக சாதனையை சமன் செய்தார் அஸ்வின். டெஸ்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முரளிதரனுடன் முதலிடத்தை பிடித்தார்.

முரளிதரன் 66 டெஸ்டில் விளையாடி 350 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த உலகசாதனையை படைத்தார். தற்போது அஸ்வினும் 66 டெஸ்டில் பங்கேற்று 350 விக்கெட் கைப்பற்றி சமன் செய்துள்ளார்.

SHARE