இந்திய அணியின் கேப்டனுக்கு இணையாக விளையாடும் தமிழக வீரர்

405

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில் சிறப்பாக விளையாடிய தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட முத்துசாமி இரண்டு இன்னிங்ஸிலும் அவுட்டாகாமல் 82 ரன்களை குவித்திருந்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட கேஷவ் மகாராஜ் மற்றும் தமிழகத்தை சேர்ந்த செனூரன் முத்துசாமி ஆகியோர் தென் ஆபிரிக்க அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்

தன்னுடைய தாய் நாட்டிற்கு எதிராகவே அறிமுகமான இருவருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு இன்னிங்ஸிலும் அவுட்டாகாமல் சிறப்பாக விளையாடிய முத்துசாமியை தமிழக இளைஞர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அவர் இரண்டு போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக அவுட்டாகாமல் இறுதிவரை களத்தில் நின்று 82 ரன்களை குவித்திருந்தார். அதோடு அல்லாமல் இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE