சேவாக் குறித்து ரசிகர் பதிவிட்ட ட்விட்டைஇ ரீட்விட் செய்துள்ள இந்திய வீரர்

30

இந்தியா முன்னாள் அதிரடி வீரர் சேவாக் குறித்து தனது ரசிகர் ஒருவர் பதிவிட்ட சர்ச்சை ட்விட்டை, இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ரீட்விட் செய்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

இதுகுறித்து சேவாக் பதிவிட்ட ட்விட்டில், ரோகித் சர்மாவுக்கு இது அருமையான டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆரம்ப துடுப்பாட்ட கனவு தொடங்குகிறது, அவருக்கு மிகச் சிறந்த வாழ்த்துக்கள்.

மாயங்க, ஷமி, அஸ்வின் புஜாரா ஆகியோரின் சிறந்த பங்களிப்புகளுடன் இது இந்தியாவுக்கு ஒரு சிறப்பான வெற்றியாகும் என குறிப்பிட்டார்.

ரவிந்திர ஜடேஜா பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களதடுப்பு ஆகிய செயல்திறனை உங்கள் டி.வி காட்டவில்லையா? அல்லது நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்களா? என Binit patel என்பவர் சர்ச்சையாக சேவாக்கின் ட்விட்டிற்கு பதிலளித்தார்.

எதிர்பாராத விதமாக இந்திய வீரர் ஜடேஜா, Binit patel-ன் ட்விட் ரீட்விட் செய்துள்ளார்.

SHARE