பூஜித், ஹேமசிறி ஆகியோரின் பிணை இரத்து

34

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிணை வழங்குவது, சட்டத்திற்கு முரணான விடயம் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், நீதிவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பிணை உத்தரவை இரத்து செய்து கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE