கோட்டை அச்சகத்தில் பரவிய தீ

22

கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள அச்சகமொன்றில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இன்று அதிகாலை 12.40 மணியளவில் குறித்த அச்சகத்தில் தீ பரவியுள்ளமை குறித்து கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைந்து செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றதுடன் தீயணைப்பு படையினரையும் வரவழைத்துள்ளனர். இத்தீக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சேத விபரங்கள் குறித்து மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோட்டை பொலிஸார் இத்தீ விபத்து குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE