துப்பாக்கி பிரயோகத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர் கைது

13

ஹங்வெல்ல துப்பாக்கி பிரயோகத்துடன் தொர்புபட்ட சந்தேக நபர் மிரிகான பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பகுதியில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

தெடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்  ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்ட சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து நான்கு வாள்களும், நான்கு கையடக்க தொலைபேசியும்  கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.