ஜனாதிபதித் தேர்தலும், சாதக பாதக தன்மைகளும்

119

இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் பேசும் மக்களினது பங்களிப்பு என்பது அரசாங்கத்திற்கு மிக முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளது. குறிப்பாக மாறி மாறி வந்த அரசுகள் போலியான வாக்குறுதிகளைக் கொடுத்தே தமிழினத்தை ஏமாற்றிவந்த வரலாறுகள் இருக்கின்றன.

ஈழத்தைத் தவிர தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்கள் வழங்கப்படும் என்கின்ற விடயத்தில் பாரிய வித்தியாசம் இருக்கிறது. வடகிழக்கு இணைந்தது தான் தமிழர் தாயகம். திம்பு மற்றும் வட்டுக்கோட்டையில் தமிழ் ஆயுதக்கட்சிகள் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் இணைந்து தமிழீழம் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பின்னர் அது அரசினால் நிராகரிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் அது 2009ஆம் ஆண்டுவரை தொடர்ந்தது. வடகிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்திவந்த விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியிலும் பரிணாம வளர்ச்சி கண்டது.

இலங்கைத் தீவினை பிரித்தாளும் நடவடிக்கையாகச் சென்று விடும் என்கிற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகளுக்கு தமி ழீழ அங்கீகாரம் அல்லது வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை கொடுக்கப்போவதில்லை என்கிற தீர்மானத்தை அரசு எடுத்துக்கொண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து அமெரிக்காவின் உதவியுடன் அப்போது பல அமைப்புக்களை பயங்கரவாதிகள் என பட்டியலிட்டிருந்தனர். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என பட்டியலிடுவதற்கு மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களே காரணமாகவிருந்தார். அதன் பின்னர் மாவிலாறில் ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதை நாம் அனைவரும் அறிவோம்.

இனிவரும் காலங்களில் தமிழர் தரப்பு பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக மாறவேண்டும். அவ்வாறு பேரம் பேசுகின்ற ஒரு சக்தியாக மாறாவிட்டால் தொடர்ந்தும் எமது அரசி யல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படும். இந்திய அரசின் தலைமையின் கீழ் மாகாணசபையாட்சி நடைமுறை உருவாக்கப்பட்டது. ஆளுநர் ஜனாதிபதி யினால் தெரிவு செய்யப்படுவார். ஆகவே ஜனாதிபதி தனக்கு ஏற்றதுபோல ஆளுநர்களை நியமிப்பார். திட்டமிடப்பட்ட அடிப்படையில் வடகிழக்கு இணைப்பு அற்ற ஒரு சுயாட்சியையே அரசாங்கம் வழங்கக் காத்திருக்கின்றது. பொலிஸ் மற்றும் காணி அதகாரம் மத்திய அர சின் கீழ் தான் இருக்கும். அவ்வாறு இருக்கின்றபோது வடகிழக்கில் சுயாதீ னமாக தமிழ் பாராளுமன்ற, மாகாண சபை, உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதற்கு தடையாக அமையும்.தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி தமி ழர் பகுதிகள் சூறையாடப்படுகின்றது. இந்நிலை மாற்றப்படவேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றின்போது தமிழ்த் தரப்பிற்கு சாதகமான தன்மைகளை ஏற்படுத்துகின்ற நடைமுறைகளை நாம் கையாளவேண்டும். தமிழ்த் தரப்பின் அதிகாரமிக்க தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு இத்தேர்தலை ஒரு இராஜதந்திர ரீதியில் கையாள்வதே தமிழ் மக்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என லாம்.

SHARE