வசூலில் புதிய சாதனை படைத்துள்ள ‘பிகில்’ திரைப்படம்!!

86
புதிய மைல்கல்லை எட்டிய பிகில்.... 5 நாட்களில் ரூ.200 கோடி வசூல்

விஜய் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்  படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா – மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார். தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படம், சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் 5 நாட்களில் ரூ.200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி, சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் மெர்சல், சர்கார் போன்ற படங்கள் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது பிகில் படமும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

பிகில் பட போஸ்டர்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா, கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

SHARE