மீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் – இந்துஜா

73
மீம்ஸை ஜாலியாக எடுத்துக்கொள்வேன் - இந்துஜாஇந்துஜா
மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை இந்துஜா விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க அவரை பற்றிய கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் சிலர் பகிர்ந்துவருகின்றனர். இது பற்றி இந்துஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்துஜா
“நான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே என்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள். நான் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்” என கூறியுள்ள அவர், தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து என்ஜாய் செய்கிறேன், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை விளம்பரம் தான் செய்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.
SHARE