திடீர் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!!

108
திடீர் திருமணம் செய்துக் கொண்ட லட்சுமி பிரியா

‘முன்தினம் பார்த்தேனே’ என்ற படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து லட்சுமி பிரியா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
லட்சுமி பிரியா சினிமாவில் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்பதால் குறும் படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வம் செலுத்தினார். அவர் நடித்ததில் மிகவும் பிரபலமான குறும்படம் தான் “லஷ்மி”. இது லஷ்மி என்ற ஒரு பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குறும்படம் ஆகும்.
லட்சுமி பிரியா திருமணம்இந்த குறும்படம் வெளியான சிலமணி நேரங்களிலேயே மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது. தற்போது நடிகை லட்சுமி பிரியா, பெங்களூரை சேர்ந்த எழுத்தாளர் வெங்கட்ராகவன் என்பவரை திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
லட்சுமி-வெங்கட்ராகவன் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
SHARE