காசு கொடுத்து நிலவுக்கு செல்லும் முதல் நபர்!!

181
dearmoon-spacex-s-1st-passenger-flight-around-the-moon-will-be-an-epic-art-project

உலகிலேயே முதல் முறையாக நிலவுச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள சுற்றுலா பயணியின் பெயரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை நிலாவுக்கு அழைத்து செல்ல உள்ளதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. இதற்காக பிக் பால்கன் என்ற ராக்கெட்டையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன்மூலம் உலகிலேயே சுற்றுலா பயணிகளை முதன்முறையாக சந்திரனுக்கு அழைத்து செல்லும் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது. இதுவரை 24 பேர் மட்டுமே நிலவிற்கு சென்றுள்ள நிலையில் தற்போது 25ஆவது நபரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவிற்கு அனுப்பவுள்ளது.

ஜப்பனைச் சேர்ந்த கோடீஸ்வரர்களில் ஒருவரான சோசோ என்னும் ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் யுசாகு மேசாவாவே நிலவிற்கு செல்லவுள்ளார். ஸ்பேஸ் எக்ஸின் இந்த அறிவிப்பால் யுசாகு மேசாவா, உலகிலேயே முதல் முறையாக காசுக்கொடுத்து சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வரும் 2023ம் ஆண்டு சந்திரனுக்கு அனுப்பப்பட உள்ளார். இந்த நிலவு பயணத்துக்காக யுசாகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது தெரியவில்லை.

 இதுகுறித்து யுசாகு மேசாவாவே கூறுகையில், “சிறு வயதில் இருந்தே நிலவிற்கு செல்லவேண்டும் என்பது எனது கனவு. எனது கனவு விரைவில் நனவாக போகிறது. முதன்முதலில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் நபர் என்ற அந்தஸ்தை பெற்றது பெருமையாக உள்ளது. சுற்றுலா திட்டம் குறித்து கருத்துக்களை பகிர டியர் மூன் என்ற இணைய பக்கத்தை தொடங்கியுள்ளேன். எனது பயணம் குறித்த சில சுவாரஸ்ய அப்டேட்டுகளை நீங்கள் அதில் தெரிந்துகொள்ளலாம்” என கூறியுள்ளார்.

SHARE