பூமிக்கு அருகில் வரும் நீளமான விண்கல் !

225
long-meteorite-travelling-towards-earth

நாசா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 230 அடியிலிருந்து 525 அடி நீளமுள்ள விண்கல் ஒன்று அடுத்த வாரத்திற்குள் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இந்த விண்கல் 2016 என்.ஃஎப் 23 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் ஒரு மணி நேரத்திற்கு 20,000  மைல் தூரம் வேகத்தில் விண்ணில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இது, பல ராக்கெட்டுகளை விட அதிவேகமானது என்றும் தெரியவந்துள்ளது.

வழக்கமாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்கல்லை விட இதன் வேகம் அதிகமாக இருப்பதால் பூமிக்கு அருகில் இந்த விண்கல் வருவது பல்வேறு நாடுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தட்பவெட்ப நிலை மற்றும் மனிதர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE