சிவகார்த்திகேயனுடன் மோத விரும்பாத சூர்யா

32
சிவகார்த்திகேயனுடன் மோத விரும்பாத சூர்யா
‘காப்பான்’ படத்துக்கு பிறகு சூர்யா நடித்து வரும் சூரரை போற்று பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்த படத்தை ‘இறுதி சுற்று’ இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
சூரரை போற்று படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று தள்ளி வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகிறது.
சூரரைப்போற்றுசூரரைப் போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது.
SHARE