2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் புதிய மாற்றம்!!

41

2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியை விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

அதன்படி ‘பவர் ப்ளேயர்’ எனும் புதிய முறையை கொண்டுவர உள்ளது.

இந்த முறை கொண்டுவரப்பட்டால், ஆட்டத்தில் பன்மடங்கு விறுவிறுப்பு ஏற்படும் எனவும் இந்திய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பவர்ப்ளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தகுதியான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வெளியிலிருந்து கொண்டுவர முடியும்.

இதுகுறித்து பி.சி.சி.ஐ. கூறுகையில்,

பவர் ப்ளேயர் திட்டம் ஏற்கனவே பி.சி.சி.ஐ கூட்டத்திலும், ஐ.பி.எல் கூட்டத்திலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஐ.பி.எல். நிர்வாகத்தில் இன்னும் ஆலோசிக்கப்பட வேண்டியது இருக்கிறது. எனினும் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு அணி 11 வீரர்களை அறிவிக்கத் தேவையில்லை அதற்குப் பதிலாக 15 வீரர்களை அறிவிக்க வேண்டும்.

போட்டியின் எந்த இடத்திலும், விக்கெட் வீழ்ந்தாலும், முக்கியமான ஓட்டம் அடிக்க வேண்டிய இடத்திலும் விளையாடும் 11 வீரர்கள் தவிர மீதமுள்ள 4 வீரர்களில் தேர்வு செய்து களமிறக்க முடியும். அதாவது மாற்று வீரராக ஒரு வீரர் இருப்பதற்குப் பதிலாக 4 வீரர்கள் இருப்பார்கள்.

இந்ததிட்டம் முதலில் விரைவில் வர இருக்கும் முஷ்டாக் அலி போட்டியில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டு அதன்பின் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளது.