தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்திய அணித்தலைவர்!!

71

இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடும்  இந்தியஅணியின் தலைவர் விராட்கோலி  15 வயது விராட்கோலிக்கு கடிதமொன்றை எழுதி டுவிட்டரில் அதனை பதிவு செய்துள்ளார்.

வாழ்க்கை மிகப்பெரிய விடயங்களை உனக்காக வைத்திருக்கின்றது விராட்,ஆனால் உன்னை நோக்கி வருகின்ற  ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவதற்கு நீ தயாராகயிருக்கவேண்டும் என கோலி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உன்னிடம் தற்போதுள்ள எதனையும் சாதாரணமானதாக கருதவேண்டாம்எனவும்அவர்தெரிவித்துள்ளார்.

நீ தோல்வியடைவாய் ஒவ்வொருவரும் தோல்வியடைவார்கள் என 31 வயது விராட் 15 வயது விராட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நீ மீண்டும் எழுவதற்கு ஒருபோதும்மறக்க மாட்டாய் உனக்கு நீயேவாக்குறுதியளித்துக்கொள்  என தெரிவித்துள்ள விராட்கோலி முதலில் உன்னால்முடியாவிட்டால் மீண்டும் முயற்சி செய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நீ பலரால்நேசிக்கப்படுவாய் அதேபோன்று  உனக்கு யாhர் என்று தெரியாதவர்கள் உன்னை வெறுக்கவும் செய்வார்கள் அவர்கள் பற்றி கவலைப்படாதே, உன் மீது நீ நம்பிக்கை வை எனவும் விராட்கோலி அந்தக்கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

இன்று உனது தந்தை உனக்கு தராத காலணிகள் பற்றி நீ கவலைப்படுகின்றாய் என்பது எனக்கு தெரியும்ஆனால் இன்று காலை அவர் உனக்கு தந்தை முத்தத்தை விட அல்லது உனது உயரம் குறித்த அவரது நகைச்சுவையை விடஅது ஒன்றும் பெரிய விடயமில்லை எனவும் விராட்கோலி தனதுகடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் சில நிமிடங்களில் கடுமையாக நடந்துகொள்வார் என்பது எனக்கு தெரியும் அவர் உனக்கு மிக்சிறந்ததை வழங்குவதற்காகவே அவ்வாறு நடந்துகொள்கின்றார் எனவும் 15 வயதுவிராட்கோலிக்கு 31 வயது விராட்கோலி தெரிவித்துள்ளார்.

பெற்றோர் உன்னை புரிந்துகொள்ளவில்லை என சிலநேரங்களில் நீ கருதலாம் ஆனால்  நிபந்தனையற்ற அன்பை வழங்குவது குடும்பத்தினர் மாத்திரமே நினைவில் வைத்துகொள் எனவும் விராட்கோலி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உனது தந்தையை நீ நேசிக்கின்றாய் என்பதை தெரிவிக்கவேண்டும், இன்றும் தெரிவிக்கவேண்டும், நாளையும் தெரிவிக்கவேண்டும் அடிக்கடி தெரிவிக்கவேண்டும்.

இறுதியாக உனது இதயம் தெரிவிப்பதை பின்பற்று , உனது கனவுகளை பின்தொடர், பெரும் கனவு எப்படி பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என உலகிற்கு தெரியப்படுத்து. நீயாகயிரு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE