ஐ.எஸ் தலைவர் பக்தாதியின் மனைவி கைது!!

71

இரண்டு வாரங்களிற்கு முன்னர் சிரியாவில் கொல்லப்பட்ட ஐஎஸ் தலைவரின் மனைவியை துருக்கியில் கைதுசெய்துள்ளதாக துருக்கி ஜனாதிபதி டயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

எனினும் கைதுசெய்யப்பட்ட பெண்ணின் பெயரை அவர் வெளியிடவில்லை.

பக்தாதி சுரங்கப்பாதைக்குள் தன்னை வெடிக்க வைத்தார் என தெரிவித்த அமெரிக்கா பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது ஆனால் நாங்கள் பக்தாதியின் மனைவியை கைதுசெய்துள்ளோம் இதனை தற்போதே நாங்கள் வெளியிடுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் இதனை பெரும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவில்லை பக்தாதியின் சகோதரியையும் நாங்கள் கைதுசெய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்தாதி மீதான தாக்குதலின் போது அவரின் இரண்டு மனைவிமார் கொல்லப்பட்டிருந்தனர் என அமெரிக்கா அறிவித்திருந்தது

இதேவேளை இரண்டு நாட்களிற்கு முன்னர் பக்தாதியின் சகோதரியை கைதுசெய்துள்ளதாக துருக்கி தெரிவித்திருந்ததுடன் அவரின் படத்தை வெளியிட்டிருந்தது.

SHARE