விமானத்தில் யோகா செய்த நபருக்கு நேர்ந்த கதி !!

92

சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர் கீழே இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை – கொழும்புக்கு இன்று காலை ஸ்பைஜெட் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், பயணிகள் அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

இந்நிலையில்,  இலங்கையைச் சேர்ந்த குணசேனா என்ற இளைஞர் திடீரென விமானத்தின் கதவு அருகே சென்று அமர்ந்தபடி யோகா பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை செய்தார்.

இதை பார்த்த மற்ற பயணிகள், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவித்தனர். குணசேனாவிடம் இருக்கைக்கு சென்று அமருமாறு ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் குணசேனா தொடர்ந்து யோகா பயிற்சி செய்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அங்கு குணசேனாவை விமானத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

அவரிடம் அமெரிக்க கடவுசீட்டு இருந்தது. அமெரிக்காவில் இருந்து டில்லி சென்ற குணசேனா அங்கிருந்து வாரணாசி சென்ற பின்னர் அங்கிருந்து சென்னை சென்று இலங்கைக்கு செல்ல விமான சீட்டை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

குறித்த நபரிடமிருந்து  சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் குறித்த நபரை விமானத்தில் ஏற்றி செல்லுமாறு விமான நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால் குறித்த நபரை விமானத்தில் ஏற்ற மறுத்து விமான சீட்டின் கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி கொடுத்தது.

இதையடுத்து குணசேனாவை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய பொலி ஸாரிடம் ஒப்படைக்க அழைத்து சென்றனர். ஆனால் குறித்த நபரை பொலி ஸார்  அழைத்துச் செல்ல மறுத்தனர்.

நீண்ட விவாதத்திற்கு பிறகு குணசேனாவை பொலிஸார் இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்க அழைத்து சென்றதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது.

SHARE