ஜோர்தானில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஐவர் படுகாயம்!!

61

ஜோர்தானின், ஜெரஷ் நகரில் உள்ள சுற்றுலாத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 3 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 பேர் படு காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய பெண் சுற்றுலா வழிகாட்டியும், பாதுகாவலர் ஒருவரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகளுமே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த நபர்கள் ஐவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்தும் உள்ளனர்.

SHARE