ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட்!!

93

ஐஎஸ்எல் கால்பந்து - ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றி பெற்றது நார்த் ஈஸ்ட்

கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணி வீரர்கள்
ஐதராபாத்:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. ஆனாலும் யாரும் கோல் அடிக்கவில்லை.
இதனால் முதல் பாதியின் முடிவில் 0- 0 என இரு அணிகளும் சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் இறுதியில் 86-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் பெரைரா ஒரு கோல் அடித்து ஐதராபாத்துக்கு அதிர்ச்சி அளித்தார்.
இறுதியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது, இதன்மூலம் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.
SHARE