யாழ். மாவட்­டத்தில் 4,75,171 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி

33

யாழ்.மாவட்­டத்தில் சுமு­க­மான முறையில் தேர்­தலை நடத்த முடி­யு­மென்றும் அதற்­கு­ரிய பாது­காப்புப் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தேர்தல் கட­மை­களில் 6 ஆயிரம் அரச உத்­தி­யோ­கத்­தர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் யாழ்.மாவட்ட அர­சாங்க அதிபர் நாக­லிங்கம் வேத­நா­யகன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பாண மாவட்­டத்தில் தேர்தல் முன்­னேற்­பாடு தொடர்பில்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தபால் மூல வாக்­க­ளிப்­புக்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. இந்த வருடம் யாழ்.மாவட்­டத்தில் 4 லட்­சத்து 75 ஆயி­ரத்து 171 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றுள்­ளார்கள். 531 வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணத்தில் தபால் மூல வாக்­க­ளிப்­புக்கள் இடம்­பெற்­றன.  267 திணைக்­க­ளங்­களில் 29 ஆயி­ரத்து 850 பேர் தபால்­மூலம் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றிருந்தனர்.

யாழ்.மாவட்ட செய­லகம், பொலிஸ் திணைக்­களம் மற்றும் தேர்தல் உத்­தி­யோ­கத்­தர்கள் எதிர்­வரும் 4ஆம் திகதி அந்­த­ந்த திணைக்­க­ளங்­களில் தமது வாக்­கு­களை அளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

தேர்தல் குற்­றங்கள் தொடர்­பாக 26 முறைப்­பா­டுகள் கிடைக்­கப்பெற்றுள்­ளன. சிறு சிறு குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அதில் இட­மாற்றம் மற்றும் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­ட­தென சிறு குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன.  அதற்­கான உரிய தீர்­வு­களும் உட­ன­டி­யாக  வழங்­கப்­பட்­டுள்­ளன.

வழமை போன்று யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரி­யி­லேயே வாக்கு எண்ணும் பணிகள் நடை­பெறும், வாக்­கெண்ணும் நிலையம் மற்றும் பாது­காப்பு நட­வ­டிக்கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

சீரற்ற கால­நிலை நில­வு­வ­தனால், நெடுந்­தீவில் இருந்து உலங்­கு­வா­னூர்தி மூலம் வாக்குப் பெட்­டிகள் மத்­திய கல்­லூ­ரிக்கு எடுத்து வரப்­பட்டு, அங்கே வாக்­கெண்ணும் பணிகள் நடை­பெறும். எழு­வை­தீவு மற்றும், அன­லை­தீவு உள்­ளிட்ட தீவு­களில் இருந்து கடற்­ப­டையின் பாது­காப்­புடன், வாக்குப் பெட்­டிகள் எடுத்து வரப்­படும். வாக்­க­ளிக்கும் நேரம் 1 மணித்­தி­யா­ல­த்தால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யினால், வாக்­கெண்ணும் நேரத்தில் மாற்றம் ஏற்­பட வாய்ப்பு இருக்­காது. அருகில் உள்ள வாக்குச் சாவ­டி­களில் இருந்து வரும் வாக்குப் பெட்­டிகள் மிக விரைவாக எண்ணும் பணிகள் ஆரம்­பிக்­கப்­படும்.

தூர இடத்து வாக்குப் பெட்டிகள் உரிய நேரத்தில் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இம்முறை தேர்தல் கடமைகளில் 6 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

SHARE