இடையூறு இல்லாது எரிவாயு சிலிண்டர்களை வழங்க ஏற்பாடு

44

லிட்ரோ லங்கா எரிவாயு நிறுவனம் நேற்றைய தினம் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளதாகவும், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் 3,800 மற்றும் 2,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ லங்கா  எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை எவ்வித இடையூறுகளும் இல்லாம் சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டடுள்ளது.

இந் நிலையில் சமையில் எரிவாயு பிரச்சினையை எதிர்கொண்டுள்ள பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களை 0774296504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE