2ஆயிரம் பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு  தீர்மானம்

44

இலங்கை போக்குவரத்து சபைக்காக  2ஆயிரம் பஸ்களை இறக்குமதி  செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு  தீர்மானித்திருக்கின்றது.

இதற்கான சர்வதேச  மட்டத்திலான கேள்வி மனு கோரப்பட்டுள்ளது.

23 ஆம் திகதி கேள்வி மனுக்கான இறுதி தினமாகும் என  போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்  அபேசிங்க தெரிவித்தார்.

பயணிகளுக்கு சிறந்த சேவையை அளிக்கும் முகமாகவே 2ஆயிரம்  பஸ்களை  இறக்குமதி  செய்வதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்படவுள்ள பஸ்களில் அதிகமானவை சொகுசு ரக பஸ்கள் ஆகும்.

இந்த பஸ்களை  வழங்குவதற்கான கேள்விகளை இந்தியா சீனா ஆகிய நாடுகள் சமர்ப்பித்திருப்பதாக போக்குவரத்து சபை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

தனியார் பஸ்  ஊழியர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இவ்வகையான நிலைமைகளை  சமாளிக்கும் வகையிலேயே  புதிய  பஸ்கள்  இறக்குமதி செய்ய  இருப்பதாக  போக்குவரத்து சபையின் தலைவர்  தெரிவித்தார்.

SHARE