இந்தியர்கள் பும்ராவின்சிலைக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவை பூஜை செய்ய வேண்டும்

69

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது  ரி 20 போட்டியில் மோசமாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட்டினை இந்திய அணி ரசிகர்கள் டுவிட்டரில் கேலிசெய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

கலீல் அகமட்டின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஏழு பவுண்டரிகளை பங்களாதேஸ் துடுப்பாட்ட வீரர்கள் பெற்றதை சுட்டிக்காட்டி கலீல் அகமட்டினை கேலிசெய்து ரசிகர்கள் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

முதல் ரி20 போட்டியில் இறுதி நான்கு பந்துகளிலும் நான்கு பவுன்டரிகளை  விட்டுக்கொடுத்த  கலீல் அகமட்நேற்று முதல் மூன்று பந்துகளில் மூன்று பவுண்டரிகளை கொடுத்திருந்தார்.

ரசிகர்கள் இது குறித்த  தங்கள் அதிருப்தியை வேடிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

இந்தியர்கள் பும்ராவின்சிலைக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவை பூஜைசெய்யவேண்டும் என்பதை கலீல் அகமட்டின் பந்துவீச்சு உணர்த்தியுள்ளது என ரசிகர் ஒருவர் டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் கலீல் அகமட் பந்துவீசிய விதத்திற்கு பின்னர் ரோகித் சர்மாவை தவிர வேறு எந்த இந்தியஅணிதலைவரும்  அகமட்டிற்கு ஆதரவளித்திருக்கமாட்டார் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட உலக கிண்ணப்போட்டிகளிற்கான அணியில் கலீல் அகமட்டை சேர்ப்பது குறித்து பரிசீலித்தால் கூட விராட்கோலியை எனது நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவேன் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE