ஈரானில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

47

வடமேற்கு ஈரானில் 5.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5 பேர்  உயிரிழந்துள்ளதோடு 120 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் –  கிழக்கு பகுதியிலுள்ள அசர்பைஜான் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதோடு, 120 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE