மாடுகளினால் பாதிப்படையும் விவசாயச் செய்கை

32

கட்டாக்காலியாக திரியும் சேனையூர் மக்களின் மாடுகளினால் விவசாயச் செய்கை பாதிப்படைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாட்டாளிபுரம் வீரமாநகர் இளக்கந்தைப் பகுதிகளில் வருடத்தில் ஒரு தடவை மட்டுமே மக்கள் தமது உணவுத் தேவைக்காக விவசாயச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

வரட்சி , காட்டு யானைகளின் தொல்லை போன்றவற்றினால் தொடர்ச்சியான பாதிப்புக்களை எதிர்நோக்கும் இம்மக்களின் விவசாய நிலங்களை வசதிபடைத்தவர்களின் மாடுகள் அழித்து வருவது வேதனைக்குரியதே.

விவசாய சம்மேளனம் மற்றும் கமநல சேவை நிலையம் போன்றவற்றினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் அதனை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

எனவே உரிய அதிகாரிகள் இதற்கான தீர்வென்றை வழங்கவேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE