கோத்தபய ராஜபக்ஷ வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெருவதை விரும்பவில்லை – வரதராஜ பெருமாள்

47

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெருவதை விரும்பவில்லை. தனது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக இணைந்த வட – கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்தார்.

நாவல வீதி , இராஜகிரியவிலுள்ள சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இணைந்த அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். தெற்கு வாழ் மக்களில் 75 வீதமானவர்கள் கோத்தாபயவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள். அதே போன்று தமிழ் மக்களும் சிறந்த தீர்மானத்தை எடுப்பதற்கு நாம் அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். எனவே தான் தமிழ் சமூக ஜனநாயக கட்சி கோத்தாபய ராஜபக்ஷவை ஆதவளிக்க தீர்மானித்தது.

அத்தோடு சுயநிர்ணயம் , சமஷ்டி உள்ளிட்ட எந்த விடயங்களிலும் கூட்டமைப்புக்கு அக்கறை கிடையாது. இலஞ்சம் கொடுத்து ஐக்கிய தேசிய கட்சி தமிழ் கூட்டமைப்பை வாங்கியிருக்கிறது. எனவே சஜித் ஆட்சிக்குவந்தால் மக்களுக்கு நிம்மதியாக இருக்க முடியாது. காரணம் அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் காணப்பட்ட அட்டூழியங்களே இவர் ஆட்சிக்கு வந்தாலும் தொடரும் என்றும் கூறினார்.

SHARE