கல்முனை சாஹிராவின்பழைய மாணவர்கள் 2000 & 2003 நடத்தும் டீ – சேர்ட் அறிமுக நிகழ்வு

59

பிரதம ஆசிரியர்,

 

தயவு செய்து இச் செய்தியினை இடம்பெறச் 

 

செய்யவும்

 

நன்றி

கல்முனை சாஹிராவின் பழைய மாணவர்கள்

2000 & 2003 நடத்தும் டீ – சேர்ட் அறிமுக நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

2000 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2003 க.பொ.த. உயர்தரம் கல்வி பயின்ற கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் டீ- சேர்ட் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) பிற்பகல் 6.30 க்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் தற்போதைய அதிபர் எம்.ஐ. ஜாபீர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

கல்முனை சாஹிராவில் அதிபர்களாகப் பதவி வகித்த முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஹுசைன், எம்.எம். இஸ்மாயில், ஏ.எம். முஸ்தபா, ஏ. பீர் முஹம்மட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்து கொள்வர்.

இதில் 2000 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2003 க.பொ.த. உயர்தரம் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ (Back To School) எனும் தொனிப்பொருளில் அமைந்த 2000 க.பொ.த சாதாரண தரம் மற்றும் 2003 க.பொ.த. உயர்தர பழைய மாணவர்களின் நிகழ்வு மிக விரைவில் இப்பாடசாலையில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE