ஹெராயின் போதை பொருளை வைத்திருந்தவர் கைது

63

மொனராகலை பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாலாறு பிரதேசத்தில் 10 கிராம் 340 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிசார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE