தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி சிங்களப் பெரும்பான்மை கட்சிகள் ஆட்சி அமைக்கமுடியாது

48

கடந்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் பல்வேறு பட்ட மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றது. இதில் சிங்களப் பெரும்பான்மை கட்சிகளே தமக்கான சாதக தன்மையை பெற்றுக் கொண்டிருக்கின்றனவே தவிர தமிழ்த் தலைமைகள் அல்ல. எனவே தமிழ் தலைமைகளை வைத்து கடந்த முப்பதாண்டுகள் காலமாக ஏமாற்றி வந்துள்ளது ஆயுதப் போராட்டம் ஆனாலும் சரி அகிம்சைப் போராட்டம் என்றாலும் சரி தனக்கு சாதகமான செயற்பாட்டையே அரசாங்கம் வகித்துக் கொண்டது.

இதில் மிக முக்கியமாக போராட்ட ரீதியில் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை கைப்பற்ற முடியும் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை கடந்த முப்பதாண்டுகள் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது தமிழ் மக்களின் உரிமையை பெற்றெடுக்கின்ற ஒரு போராட்டமாகும். விடுதலைப் புலிகளின் போராட்டத்தை மழுங்கடிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச நாடுகளுடன் இணைந்து தமிழீழப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனாலும் அரசியல் ரீதியான போராட்டங்கள் பின்னர் வெற்றி அளிக்கவில்லை. யுத்தத்திற்கு முன்னர், பின்னர் என்று இருகட்டங்களாக அதனை பிரிக்கலாம். டட்லி சேனநாயக்கா தொடக்கம் மைத்திரிபால சிரிசேன வாரை கொண்டு வரப்பட்ட ஆட்சி முறைகள் எல்லாம் கிடப்பில் போடப்பட்டதே வரலாறு.

தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது ஒரு வகையில் சர்வதேசம் வரை ஏற்றப்பட்டுள்ளது அது அக்கிய நாடுகள் சபை வரை பேசப்படுகின்றது. அதே நேரம் இலங்கை அரசாங்கமே தமிழினத்தை கொண்றொழித்து இனப்படுகொலையை மேற்கொண்டது என்கின்ற சம்பவமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகளை, பொது மக்களை பயங்கரவாதம் என முத்திரை குத்தி தாம் செய்த பிழையை மூடி மறைப்பதற்கு சர்வதேச நாடுகளின் உதவியோடு அரசாங்கம் முடிவுகளை எடுத்துக் கொண்டது. ஒரு விடையத்தை தமிழ் மக்கள் ஆகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும் தேசியம், சுயநிர்ணய உரிமை என்று ஒன்று கிடைக்காமல் போனாலும் தொடர்ந்து போராடுகின்றவர்களாகவே நாம் இருக்கின்றோம்.

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தமது சுயநல அரசியலுக்காக நாட்டின் விடுதலைக்காப் போராடிய போராளிகளையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்தி இன்று அரசாங்கத்தின் கைக்கூலிகலாக பலரை மாற்ற திட்டம் அமைத்திருக்கின்றது. ஒரு சிலர் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றார்கள். இன்றைய சூழ்நிலையில் இவர்களே அகிம்சைப் போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கின்றார்கள். நிலமை எவ்வாறாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் இன்றும் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்டது என்ற நிலைப்பாட்டிலேயே செயற்பட்டு வருகின்றது. அதனை யாராலும் மாற்றியமைக்கமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை செயலிலக்கச் செய்து விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது என்ற நிலைப்பாட்டை இல்லாதொழிக்கும் செயற்பாடாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைபின் உள்ளே சகுணி ஒருவர் திட்டமிட்டு அனுப்பப்பட்டிருக்கின்றார். இதுவரையும் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைவர்களை இனங்கண்டு துரத்துவதன் ஊடாக தமிழ் அபிலாசைகளை முன்னெடுக்கமுடியும். இன்றைய அரசியல் சூழ்நிலைகளை தீர்மாணிக்கும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்றால் அது தமிழினம் பெருமைப்படும் ஒரு விடையம்.

SHARE