ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக புளொட் கட்சியினுடைய செயலாளர் நாயகம் சித்தார்த்தன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

101

கேள்வி : ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. பெரும்பான்மை கட்சிகளிலே அதாவது சஜித் பிரேமதாஸ அல்லது கோத்தபாய ராஜபக்ச அவர்களில் ஒருவர் தான் ஜனாதிபதியாக வர இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அந்த ஐந்து கட்சிகளில் இணைந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தபோதிலும் இறுதியாக ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பானது சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்று. இதனை புளொட் கட்சி எவ்வாறு பார்க்கிறது?

பதில்: தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் இதில் ஆறு கட்சிகளாக தொடங்கி பின்பு ஐந்து கட்சிகளாக ஒரு நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். இருந்தாலும் அந்த நிலைப்பாடு வந்த போதும் கூட முதலாவது அம்சமாக இருக்கக்கூடிய சமஸ்டி சுயாட்சி வடகிழக்கு இணைப்பு இவை எல்லாவற்றையும் இணைத்து அந்த தீர்வு சம்பந்தமாக கதைப்பதற்கு எந்த அமைச்சரும் தயாராக இல்லாத நிலைமையை நாங்கள் பார்த்தோம். இருந்தாலும் எங்களுடைய கட்சிகளுக்குள்ளே கதைக்கின்ற பொழுது ஒரு விடயத்தை கூறுகின்ற முற்று முழுதாக எல்லா விடயங்களையும் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் முக்கியமான சில விடயங்களை அரசியல் தீர்வு என்பது உடனடியாக வரக்கூடியதல்ல ஆகவே அதை விடுத்து ஜனாதிபதி மாத்திரம் தனியே எடுக்கக்கூடிய விடயமும் அல்ல. அது பாராளுமன்றத்திலே எடுக்கப்பட வேண்டிய விடயம். ஆகவே நாங்கள் மற்ற விடயங்களில் பெரும்பான்மையான விடயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைச்சரை ஆதரிக்க வேண்டிய நிலைப்பாடு இருந்தாலும் நாங்கள் இது சம்பந்தமாக வுNயு சஜித் பிரேமதாஸவுடன் நின்று பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றார்கள். அவரின் நிலைப்பாடுகள் ஒரு சாதகமான நிலைப்பாடு இல்லாததை பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஏங்களை பொறுத்தவரையில் இன்று சாதகமான நிலைப்பாடுகள் இல்லாவிட்டாலும் இன்று இருக்கின்ற நிலைப்பாடுகள் மாறுபடக்கூடிய விதத்திலே அமைதிகள் குழையக்கூடிய விதத்திலே இல்லாமல் பாதகமற்ற ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது நல்லது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டுடன் நாங்கள் ஒத்துப்போவதாக தீர்மானித்திருந்தது. அதனடிப்படையிலே அவர்கள் எடுக்கின்ற அந்த நிலைப்பாட்டிற்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கின்றோம்.

கேள்வி : பெரும்பான்மை சமூகம் என்பது அதிலே சஜித் கோத்தா இருவரும் இருக்கிறார்கள். அடுத்த படியாக எமது தமிழ் தரப்புக்களை பொறுத்தவரையிலே சிவாஜிலிங்கம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலிலே போட்டியிடுகிறார். அவ்வாறு இருந்தால் ஒரு தமிழ் தலைமையை பிரதிநிதித்துவப்படுத்துபவரிற்கு வாக்களித்து தமிழ் மக்களின் உரிமைகளை நாங்கள் வெளி உலகத்திற்கு காட்டுவது அல்லது எங்களுடைய பலம் இருக்கிறது என்பதை காட்டினால் அது பிழையாகுமா?

பதில் : பிழை என்று நான் சொல்ல மாட்டேன். அப்படியான நிலைப்பாட்டிலே சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொமிட்டி கிளிநொச்சியில் எல்லாவற்றிலுமே நாங்கள் பேசியிருக்கிறோம். பேசி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றோம். அதனடிப்படையிலேயே நாங்கள் இந்த ஆதரவை கொடுக்கின்றோம்.

கேள்வி : சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது என்பதில் நீங்கள் ஒரு விடயத்தை கூறியிருந்தீர்கள்.

புதில் : அநேகமாக எப்படியும் அது பிழை அந்த வாக்குகள் நாங்கள் எதை செய்வோம் என்றால் அந்த வாக்குகளை எதிர்த்து நாங்கள் ஆதரிக்க கூடிய வெல்லக்கூடிய ஒருவரின் சந்தர்ப்பம் இருக்கிறது என்று நினைக்கின்றோம்.

கேள்வி : ஆகவே நீங்கள் உங்களுடைய கட்சியின் தீர்மானத்தின்படியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தின் படியும் நீங்கள் செயற்படுவதாக சஜித்தை ஆதரிப்பதாக முடிவெடுத்திருக்கிறீர்கள். ஆப்படித்தானே?

புதில் : சிவாஜிலிங்கம் அவர்களை பொறுத்தவரையில் அவர் தனியாக தானாக சுயேட்சையாக சென்று கட்டுப்பணத்தை கட்டி வேட்புமனுவை கொடுத்திருக்கிறார். ஆகவே அவரை ஒரு பொது வேட்பாளராகவோ அல்லது தமிழ் மக்களுடைய வேட்பாளராகவோ நாங்கள் கருதி அப்படியென்றால் ஆரம்பத்திலே இருந்து நாங்கள் அனைவருமாக பேச்சு வார்த்தகளை நடத்தி ஒருவரை நீங்கள் கூறியது போன்று தமிழ் மக்கள் ஒற்றுமையாக நிற்கின்றார்கள் என்பதை காட்ட முடியும். அந்த ரீதியிலே அது நடைபெறவில்லை. அது மாத்திரமல்ல முக்கியமாக டெலோ பிளட்டை சார்ந்தவர். டெலோ இயக்கமே அவரை வெளியேற்றி விடுவதாக தீர்மானித்து அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள். ஆகவே அவர்களே வெளியேற்றுகின்ற பொழுது நாங்கள் அப்படியான ஒரு ஆதரிப்பது என்பது டெலோவிற்கு எதிரான நிலைப்பாட்டையல்லோ எடுப்போம்.

கேள்வி : சித்தார்த்தன் அவர்களே நீங்கள் உண்மையில் முதுமை வாய்ந்த ஒரு அரசியல்வாதி அரசியல் அனுபவம் கொண்டவர் தீ மு பேச்சு வார்த்தைகளிலும் கலந்து கொண்ட நபரென்று நினைக்கின்றேன். அந்த அடிப்படையிலே டட்லி சேனாநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரையிலான ஆட்சியாளர்களிலே தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமடையாத நிலையிலே எதிர் வருகின்ற ஜனாதிபதியாக வருகின்ற எவராலும் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

பதில் : இல்லை ஆனால் அதற்காக நாங்கள் முயற்சிக்காமல் விடமுடியாது. நிச்சயமாக நாங்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

SHARE