ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

90

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சி.வி. விக்கினேஸ்வரன் ஐயா அவர்களே வணக்கம். பரபரப்பான சூழ் நிலையிலே ஜனாதிபதி தேர்தலானது கலைகட்டியிருக்கிறது. அந்த இடத்திலே சஜித் பிரேமதாஸாவா அல்லது கோத்தபாய ராஜபக்சவா வரப்போகிறார்கள் என்ற நிலைப்பாட்டிலே அதில் ஆறு கட்சிகள் இருந்தன. அதிலே ஒரு கட்சி வெளியேறியது. மீண்டும் அந்த ஐந்து கட்சிகளும் கைச்சாத்திட்டது இந்த நிலையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனியொரு முடிவை எடுத்து சஜித் பிரேமதாஸாவை ஆதரிக்க போகிறோம் என்ற ஒரு நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்த நிலையிலே தங்களின் நிலைப்பாடு ஏன் விலகிச் சென்று உங்களுடைய அறிவிப்பை செய்ய வேண்டியிருந்தது என்பதற்கான விளக்கத்தை கூற முடியுமா?

பதில் : ஓம் கட்டாயம். அதாவது எங்களுடைய ஐந்து கட்சிகளும் சேர்ந்து நான்கு நாட்களாக பேசிக்கொண்டுவந்த காலத்திலே இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய ஒரு உறுப்பினர் எங்களுடைய கோரிக்கைகள் சம்பந்தமான ஆவணத்தை மூன்று பிரதான கட்சிகளிள் வேட்பாளர்களான கோத்தபாள அனுர மற்றும் சஜித் ஆகிய மூவருக்கும் கொடுத்து அவர்களுடன் எங்களுடைய இந்த கோரிக்கைகள் சம்பந்தமாக ஒரு கருத்து பரிமாற்றம் நடத்த வேண்டுமென்று அதை தான் செய்வதாக கூறியிருந்தார். அதாவது அதனை மிக விரைவிலே அவர்களுடன் சம்பந்தப்படுத்தி இதனை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து அவர்களுக்கு கொடுத்து எங்களை அவர்களுடன் பேசுவதற்கு வழிவகுப்பதாக கூறியிருந்தார். ஆனால் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. ஏன்னுடைய கட்சி உறுப்பினர்கள் அவருடனும் அவரின் கட்சி உறுப்பினர்களுடனும் சேர்ந்து கதைத்த பொழுது இந்த அந்தா என்று சொல்லிக்கொண்டு இருந்தார் அப்பொழுது எங்களுக்கு விளங்கிவிட்டது இதை செய்வதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை என்று. அந்த இரண்டோ மூன்று நாட்கள் இருக்கும் நிலையிலே மாகாண சபையிலே என்னுடன் வேலை செய்த அலுவலர்கள் பலர் போன் பண்ணி கேட்டார்கள் சேர் நாங்கள் யாரிற்கு வாக்களிக்க வேண்டுமென்று அப்பொழுது நான் சொன்னேன் கொஞ்சம் பொறுங்கள் இந்த ஐந்து கட்சிகளும் ஒரு தீர்மானத்திற்கு வருவார்கள் அந்த நேரத்தில் நான் சொல்கிறேன் என்று கூறினேன். ஆகவே இதை கேட்டு கேட்டு கொண்டிருக்கும் பொழுது நடக்காத காரணத்தினால் அவர்களுடன் தொடர்பு கொள்ளவுமில்லை, அவரிகளுக்கு இதைப்பற்றி தெரிவிக்கவுமில்லை. இந்த நிலையில் அதை நானே உடனே மொழி பெயர்த்து அவர்களு மூவருக்கும் அனுப்பி எங்களுடைய கட்சி உறுப்பினரே கொண்டு போய் கொடுத்து உடனே வந்து செயற்படுத்தி ஒரு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு இசையவில்லை. அத்துடன் கோத்தாவே கூறிவிட்டார் நாங்கள் எந்தவிதமான கோரிக்கைகளுக்கும் நாங்கள் இடங்கொடுக்கமாட்டோம் என்று அவர் கூறிவிட்டார். அனுர திஸாநாயக்க ஒரு சில விடயங்களை குறிப்பிட்டு அவற்றை தாங்கள் கொடுப்பதாக கூறியிருந்தார். சஜித் பிரேமதாஸா எதையுமே கூறவில்லை. தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெகுவிரைவில் வெளிவரும் என்று கூறியிருந்தார். ஆகவே இந்த நிலையிலே எங்களுக்கு சாதகமான முறையிலே எவருமே கூறாத நிலையிலே போஸ்டர் வாக்குகளுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் பொழுது தான் நான் இது சம்பந்தமாக எங்களுக்கு எந்தவிதமான அவர்களுடைய மனோநிலை பற்றியும் தெரியாதபடியால் அவர்கள் இதை செய்வார்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் இதற்குத் தான் வாக்களியுங்கள் என்று சொல்லும் தார்மீக உரித்து எங்களுக்கு இல்லை. அதிகூடிய ஒரு செய்தியை நான் பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தேன். அதற்கு பின்னர் எங்களுடைய அலுவலர்கள் போஸ்டர் வாக்களிப்பு செய்து தாங்கள் நினைத்த மாதிரி ஒவ்வொருவருக்கும் அனுப்பி விட்டார்கள். அதன் பின்னர் இவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்தது. அதிலே முக்கியமான விடயம் என்னுடைய கண்களுக்கு பட்டது. யேசி என்றால் ஒற்றை எக்ஸப்ட் என்றால் ஒருமித்த, ஒருமித்த என்றால் யுனைட்டர், யுனைட்டர் எக்ஸ்டட் பாட்டி என்றால் எக்ஸ்ப்ட யாதிக பக்ச என்று சொல்வார்கள். ஏக்ஸ்டப்ட் என்றால் சேர்ந்து ஒருமித்து செல்வது. ஆனால் யேசிய என்று சொல்வது தனித்து ஒன்றாக இருப்பது. ஆவரை இவர் யுனிட்டி ஐசிஎம் என்ற இரு சொல் பாவித்து சிங்களத்திலே ஒற்றையாட்சி சம்பந்தமான ஒரு சொல்லை தான் பாவித்து இருக்கிறார். ஆகவே சிங்களவருக்கும் தமிழ் பேசுபவர்க்கு ஒன்றையும் ஆங்கிலம் தமிழ் பேசுவோருக்கு ஒன்றையும் அவர் வெளிக்காட்டியிருக்கிறார் என்பதையும் கண்டு கொண்டேன். இதன் காரணத்தின் பின் அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பலவிதமான பிரச்சனைகளை நான் கண்டுகொண்டேன். உதாரணத்திற்கு எங்களுடைய மாவட்ட செயலாளர்கள் கிராம சேவையாளர்கள் எல்லோரையும் முன்னர் மாகாணசபைக்கு கீழ் இருந்தவர்களை இவரது தகப்பனார் தான் 1992 58 வதுஇலக்க சட்டத்தின் கீழ் அவர்களை எடுத்து மத்திய அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். அதனை இல்லாதாக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் அப்படியே தொடர்ந்து இருப்பார்கள் ஆனால் மாகாணசபையினுடைய முகவர்களாக இருப்பார்கள் என்ற செய்தியை இவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலே வெளியிட்டிருந்தார். ஆகவே அங்கேயும் இருந்து கொண்டு இங்கேயும் இருக்கலாம் என்று சொன்னால் உண்மையின்படி அவர்கள் மீது அதிகாரம் வகிப்பது மத்திய அரசாங்கம். ஆகவே மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் எங்களுடைய உயர் அதிகாரிகள் வந்தார்கள் என்றால் எங்களால் வேலை செய்ய முடியாமல் போய்விடும் எங்களது மாகாணத்திலே. இதில் எல்லாவற்றிலும் மத்திய அரசாங்க ஒற்றையாட்சி சம்பந்தமான ஒன்றுபட்டு ஒற்றை ஆட்சியின் கீழ் சில நடவடிக்கைகள் எடுப்பதாக தான் அவருடைள சகல விடயங்களும் கூறப்பட்டிருந்தன. அவரும் தொடர்ந்து இப்;பொழுது இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு நடத்துவார் என்பது தெளிவாக இருந்தது. இந்த நிலையில் எங்களால் அவரிற்கு வாக்களியுங்கள் என்று சொல்ல முடியாது போனதன் காரணத்தினால் மக்களிடையே நீங்களல் பல சூழ்நிலைகளை பார்த்து உங்களுக்கு ஏற்ற விதத்தில் ஒருவரிற்கு வாக்களியுங்கள் என்று கூறியிருந்தோம். அது யாராகவும் இருக்கலாம். மக்கள் கோத்தாபாயவிற்கு வாக்களிக்க வேண்டுமென்றால் கோத்தாபாயவிற்கு சஜித்திற்கு வாக்களிக்க வேண்டுமென்றால் சஜித்திற்கு அனுரவிற்கு வேண்டுமென்றால் அவரிற்கு ஸ்ரீசிங்க ஜெயசூர்யவிற்கு எங்களுடைய கோரிக்கைகளை முற்றாக இதுவரையிலே ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சிங்கள தலைவர் அவர் தான் ஸ்ரீசிங்க ஜெயசூர்ய. அவர் நான்காவது தடைவையாக ஜனாதிபதி தேர்தலிலே நிற்கின்றார். ஆவர் வாக்கெடுப்பதற்காக வருவதில்லை. அவர் பலவிதமான விடயங்களை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு வருபவர். நூங்கள் தமிழ் மக்களுக்கு தாங்களே ஆளும் உரிமைகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது பிழையானதொன்று நாங்கள் எங்களுடைய சிங்கள ஆதிக்கத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆகவே அவர் ஒருவர் இந்த மூவர் அல்லது சிவாஜிலிங்கம் அல்லது ஸ்ரீதுங்க அதைவிட வேறு பழைய இராணுவத்; தளபதி இவ்வாறு எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தூங்கள் நினைத்து யாரிற்கு வாக்களிக்க வேண்டுமாக இருந்தாலும் வாக்களிக்கலாம் என்று நாங்கள் சொல்லியிருக்கின்றோம். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர் யார் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற்று வந்தவருடன் நாங்கள் பேசக்கூடியதாக இருக்க வேண்டும். எங்களுடைய வருங்கால அரசியல் பற்றிய விடயங்கள் பற்றி நாங்கள் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. இவருடன் அவருடன் சேர்ந்து ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னால் ஸ்ரீசேனாவிற்கு நாங்கள் முழுமையாக வாக்களித்ததால் தான் அவர் பதவிக்கு வந்தார். ஏல்லாம் செய்வோம் செய்வோம் என்று சொல்லி விட்டு ஒன்றுமே செய்யவில்லை. இதே மாதிரி தான் எவர் வந்தாலும் நடக்கப் போகிறது. ஆகவே மக்களை நாங்கள் வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு ஜனாதிபதியாக வரும் எந்தவொரு வேட்பாளருடனும் எங்களுடைய வருங்காலம் பற்றிய விடயங்களை நாங்கள் பேச இருக்கின்றோம். இது தான் எங்களுடைய கருத்தும் எங்களுடைய நிலைப்பாடும்.

SHARE