எரி­வாயுப் பொருட்­களின் விலை உயர்வைக் கண்­டித்து ஈரானில் வன்­முறைப் போராட்­டம்

66

ஈரானில் சமீ­பத்தில் நடந்த வன்­முறைப் போராட்­டத்தில் சுமார் 731 வங்­கி­களும், 140 அரசு அலு­வ­லகங்­களும் எரிக்­கப்­பட்­ட­தாக அந்­நாட்டின் உள்­துறை அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து ஈரான் உள்­துறை அமைச்சர் அப்­துல்­ரேசா ரஹ்­மானி கூறும்­போது, “ஈரானில் எரி­வாயுப் பொருட்­களின் விலை உயர்வைக் கண்­டித்து நடத்­தப்­பட்ட வன்­முறைப் போராட்­டங்­களில் சுமார் 731 வங்­கி­களும், 140 அரசு அலு­வ­லகங்­களும் எரிக்­கப்­பட்­டன. 70 பெற்றோல் நிலை­யங்­களும் தாக்­கு­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டன.

சுமார் 2 இலட்­சத்­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் நவம்பர் 15ஆம் திகதி முதல் நடை­பெற்ற போராட்­டங்­களில் பங்­கெ­டுத்­தனர்” என்று தெரி­வித்­துள்ளார். ஆனால், தாக்­குதல் நடந்த இடங்­களை அவர் விரி­வாகக் குறிப்­பி­ட­வில்லை. ஈரானில் பெற்றோல் உள்­ளிட்ட எரி­பொ­ருள்­களின் விலை 50 சத­வீதம் கடந்த வாரம் உயர்த்­தப்­பட்­டது. பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளுக்­காக இந்த விலை உயர்வு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக ஈரான் அரசுத் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக ஈரான் பாது­காப்புப் படைகள் நடத்­திய தாக்­கு­தலில் 100இற்கும் அதி­க­மா­ன­வர்கள் இறந்­தி­ருக்­கலாம் என்று ஆம்னெஸ்டி தெரி வித்திருந்தது. ஆம்னெஸ்டியின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்து விட்ட மை குறிப்பிடத்தக்கது.

SHARE